Black cumin seeds benifts: கருஞ்சீரகத்தின் நன்மைகள்;எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும்
என்றும் நமக்கு நன்மை தரக்கூடிய பொருட்களில் ஒன்றாக கருஞ்சீரகம் உள்ளது. கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவை நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது கருஞ்சீரகத்தின் நன்மைகளையும் கருஞ்சீரகத்தை எவ்வாறு இந்த பொருளுடன் சேர்த்து சாப்பிடலாம் என்பதை பற்றியும் ஒரு சில வரிகள் பார்க்கலாம். இதனால் பல பேருக்கு உதவும் மருத்துவ பொருளாக இருக்கும். பல நாள் நோய்களால் அவதிப்பட்டு வந்த பலருக்கும் கருஞ்சீரகம் மிகச்சிறந்த மருந்தாக செயல்படும்.
கருஞ்சீரகத்தின் நன்மைகள்
- கருஞ்சீரக பொடியை உடலில் தேய்த்து குளித்து வர சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் என்றும் பணிவுடன் காணப்படும்.
- தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு கருஞ்சீரகம் சாப்பிட்டு வர உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை குறைந்து முற்றிலும் குணமாகும்.
- கருஞ்சீரகத்தில் ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால் தினமும் நாம் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வர இரைப்பை மற்றும் கல்லீரலில் ஏற்படும் கிருமிகளை ஒழிக்கும்.
- ஆஸ்துமா மற்றும் மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்துடன் அரை டீஸ்பூன் பூண்டு சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். மூச்சு விடுவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கும்.
- நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பொறியல் மற்றும் ரசம் போன்ற உணவுகளில் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர நம் முன்னோர்கள் கூறிய உணவே மருந்து என்ற பழமொழி நிஜமாகும்.
- கருஞ்சீரகத்துடன் ஓமம் சுக்கு திப்பிலி மற்றும் மாவிலங்கப்பட்டை சம அளவு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் பின்பு பொடியில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு கஷாயமாக தினமும் குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.
- மேலும் மாதவிடாய் காலத்தில் வயிறு வலி ஏற்படுதல் அதிக உதிரப்போக்கு, உடல் சோர்வு இடுப்பு வலி ஆகியவை விரைவில் குணமாகும்.
- தினமும் கருஞ்சீரகம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு விரைவில் சரியாகும்.
இவ்வாறு பல மருத்துவ குணங்களை தன்னுள் வைத்துள்ள கருஞ்சீரகத்தை நாம் அனைவரும் இப்பொழுது மறந்து விட்டோம். கருஞ்சீரகம் பயன்படுத்துவது என்பது முற்றிலும் குறைந்துவிட்டது. கருஞ்சீரகத்தின் மகத்தான மருத்துவ குணங்களை தெரிந்த பின்பு இனிமேல் நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கக் கூடாது. அன்றாட உணவில் எப்பொழுதும் நாம் பயன்படுத்தும் சீரகத்தை போன்று கருஞ்சீரகத்தை சிறிது சேர்த்துக் கொண்டாலே போதும் அவற்றின் பயன் நமக்கு ஏராளமாக கிடைக்கும்.