காயுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான்
வாரம் ஒருமுறை சுண்டைக்காயை உணவில் சேர்த்து வருவது நல்லது. சிறியதாக இருந்தாலும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகமாக காணப்படுகிறது. பல மருந்து தயாரிப்புகளுக்கு இதை உபயோகிக்கிறார்கள்.
பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டில் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். இதில் முக்கியமானதாக சேர்க்கப்படுவது சுண்டைக்காய் தான். தாய்பால் சுரப்பை அதிகரித்து செரிமான சக்தியைத் தூண்டி உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக் கூடியது. பார்வை திறனை அதிகரிக்கவும், நினைவாற்றல் பெருகவும் இது உதவுகிறது. வாய்ப்புண் உருவாவதை தடுக்கிறது. சொத்தைப் பல் வருவதை தடுக்கிறது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் காயங்களையும், புண்களையும் ஆற வைக்க உதவுகிறது.
இதிலுள்ள இரும்புச்சத்து, ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. இரும்புச்சத்து என்றதும் கேழ்வரகு, கீரை போன்றவற்றை நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயம் ஆகும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய ரத்தக் கொழுப்பு சேர்ந்து ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.
வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. பெரிய வேலைகளை செய்யக் கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை சுண்டைக்காயில் உள்ளன. நீரிழிவு, இதயநோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம்.
வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் சி-யை அதிகமாக கொண்டுள்ளது. ஆரஞ்ச், கொய்யா, பப்பாளி நிகரான வைட்டமின் சி இந்த சுண்டைக்காயில் காணப்படுகிறது. காய்கறிகளில் மிகவும் சிறிதான காய் சுண்டக்காய்.
சுண்டைக் காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்று கூட சொல்லலாம். உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதில் இருந்து கொழுப்பை கரைப்பது வரை பெரிய வேலைகளை செய்கிறது. இத்தனை மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த சுண்டக்காயை எங்கு பார்த்தாலும் பச்சையாக பறித்து வந்து சமைத்து சாப்பிடுங்கள்.