பாத்திரங்களின் சத்துக்களும்!! அதனை பயன்படுத்தும் முறையும்…
நாம் உண்ணும் உணவுகள் மட்டும் சத்து நிறைந்தவை என்றாலும், அது சமைக்கும் பாத்திரங்களிலும் உடலிற்கு தேவையான ஆரோக்யம் உள்ளன. இப்படி எவர் சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை அதன் நன்மைகளை பற்றி போன பதிவில் குறிப்பிட்டேன். அதன் தொடர்ச்சி இந்த பதிவில் பார்ப்போம். இரும்பு, எவர்சில்வர், அலுமினியம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் செம்பு, மண்பானையை பற்றி பார்ப்போம்.
மண் பாத்திரங்கள்
மண்சட்டி புதிதாக வாங்கி வந்து, வடுச்ச கஞ்சி தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்து, நன்கு கழுவி வெயிலில் காயவைத்து, பிறகு பயன்படுத்த வேண்டும். மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேகும் தன்மை கொண்டது என்பதால், செரிமான கோளாறுகள் ஏற்படாது. உலோகங்கள் போன்ற அமிலத்தன்மை இதில் இல்லை. இதனால் செரிமான பிரச்னை இல்லை. உடல் குளிர்ச்சி மற்றும் உடல் சூடு தணிவதால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.
இதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உடலுக்கு ஆரோக்யம் தரவல்லது. மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவு சீக்கிரம் வெந்து விடும். உணவில் உள்ள சத்துக்கள் ஆவியாவது தவிர்க்கப்படும். இதில் சமைத்த உணவை நீண்ட நேரம் சூடாக வைத்திருப்பதால், உணவு சீக்கிரம் கெடாது.
செம்பு பாத்திரங்கள்
செம்பு பாத்திரத்தில் சமைக்கும் போது இதிலுள்ள ஆன்டி- ஆக்சிடன்ட் நரம்பு மண்டலத்தை தூண்டிவிடும் தன்மை உள்ளதால், சோர்வை நீக்கி, சுறுசுறுப்பை தரும். உடலின் வெப்பத்தை சீராக்கும்.
உடலின் செல் உருவாக்கத்தை அதிகரித்து, உடலின் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். சரும பிரச்சனையை போக்கும். தைராய்டு சுரப்பை சீராக்கும். செம்பு பாத்திரம் பாக்டீரியா அளிக்கும் தன்மை கொண்டது. என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த அணுக்கள் சீராக இயங்க தொடங்கி, ரத்த சோகை பாதிப்பிலிருந்து விடுபடலாம். செம்பில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மூட்டு வழியை போக்கும்.
செம்பு பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி நான்கு மணி நேரம் கழித்து குடிக்கலாம். சோப்பை விட எலுமிச்சை தோல், புளி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது எளிதில் பாசி புடிக்கும் தன்மை கொண்டது என்பதால், சமைத்து உடனே வேற பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். சரியாக சுத்தம் செய்யாவிடில், பாத்திரத்தின் நிறம் மாறுவதோடு, அதன் தன்மை மாறிவிடும்.
மேலும் படிக்க
நீங்கள் உபயோகபடுத்தும் பாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…