மன அழுத்தத்தை போக்க, மனம் புத்துணர்ச்சி பெற!
மனம் சோர்வடையாமல் புத்துணர்ச்சி பெறுவதற்கும், குழந்தைகள் இதை தவறாமல் செய்து வருவதால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். மேலை நாடுகளில் இந்த பயிற்சி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. தொடர்ந்து தோப்புக் கரணம் செய்து வருவதால் மனம் வளர்ச்சி அடையும் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் இதை ஆராய்ச்சியாளர்கள் மூலம் நிரூபித்து உள்ளனர்.
தோப்புக் கரணம் செய்முறை : முதலில் நெஞ்சை நிமிர்த்தி நேராக நின்று கொள்ள வேண்டும். வலது காதின் மடலை இடது கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் உதவியுடன் மென்மையாய் மசாஜ் செய்ய வேண்டும். அதே போல் இடது காதின் மடலை வலது கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்கள் துணையுடன் மென்மையாய் மசாஜ் செய்ய வேண்டும்.
பெருவிரல், காது மடலின் மேற்புறத்திலும், ஆட்காட்டி விரல் காது மடலிலும் பின்புறத்திலும் இருப்பது முக்கியமாகும். இடது கை உட்புறமும் வலது கை மேற்புறமும் இருப்பது போல, கைகளை குறுக்காக வைத்து காது மடல்களை பிடித்துக் கொள்ள வேண்டும். உயர்த்திய படி மூச்சை நீளமாய் வெளியேற்றிய படியும் உட்கார வேண்டும்.
குறைந்த பட்சம் 16 முறை
கால்களை தரையில் பதித்த படி, மூச்சை இழுத்த படி நிமிர வேண்டும். இவ்வாறு உட்கார்ந்து நிமிரும் பயிற்சியை குறைந்த பட்சம் 16 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால், காலை, மாலை என இருவேளையும் செய்யலாம். வாய்ப்பிருந்தால் மதியம் சாப்பாட்டிற்கு முன்பாக செய்ய வேண்டுமாம். மலக்குடல் தூய்மை செய்து வயிற்றைக் காலியாக வைத்த படி செய்வது இதன் பலனை தரும்.
இந்தப் பயிற்சியை முடித்ததும் கைகளை நீட்டி வணங்கி இறைவனுக்கு அல்லது இயற்கை மகா சக்திக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தோப்புக் கரணம் செய்வதற்கு முன்பு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கிழக்கு நோக்கி நிற்க வேண்டுமாம். 40 வயதிற்கு மேல பெரியவர்கள் வடக்கு நோக்கி நின்று செய்வது உத்தமம். நாக்கை ‘ழ்’ உச்சரிப்பில் வளைத்து மேல் அண்ணத்தில் ஒட்டவைத்து படி வாயை வைக்க வேண்டும்.
சூப்பர் பிரைன் யோகா
எல்லாம் வல்ல இறைவனை அல்லது குரு மகானை நினைத்து இந்த தோப்புக் கரணத்தை வெற்றிகரமாக, மனதில் எண்ணிய படி செய்ய ஆரம்பிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கையை வணங்கி கொள்ளலாம். விநாயகப் பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த தோப்புக்கரணம்.
ஒரு சூப்பர் பிரைன் யோகா என்ற பெயரில் உலகெங்கும் கற்றுத் தரக்கூடிய ஒரு பயிற்சியாக உள்ளது, என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இது மன அழுத்தத்தை போக்குவதுடன், மனம் புத்துணர்ச்சி ஆகவும் இருக்கும். இதை நீங்களும் ,உங்கள் குழந்தைகளும் முயற்சி செய்து பார்க்கலாமே.