கிராம மக்களின் சாத்துக்குடி புளிப்பான நார்த்தங்காய்…!!
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது நார்த்தங்காய் தினமும் உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்வதால் ஏற்பட கூடிய இதன் பயன்களை பற்றி இந்த பதிவில் காண்போம். பழத்தின் சாறை தண்ணிரில் கலந்து குடிப்பதால் வயிறு பொருமல் நீங்கும். நார்த்தங்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் உடல் பலம் பெரும். நோய் தாக்கத்தால் அவதிப்படுவோர் இந்த சாறை குடிப்பதால் உடல் நலன் தேறும்.
உடல் பலம் பெற
இப்பழத்தின் சாறு குடித்து வர ரத்தம் சுத்தம் அடையும். வயிற்று புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. ரத்தம் மாசடையும் போது, ரத்தத்தில் உள்ள வெள்ளணுக்கள் குறைவு ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். பித்தத்தினால் வரக்கூடிய தலைசுற்றல், வாந்தி, மயக்கம் குணமாகவும், நார்த்தங்காய் சாறை காலை சாப்பிடுவதால் குறையும். இந்த சாறுடன் தேன், பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலம் ஆகும்.
நோய் நிவாரணி
வாதம், குன்மம்,வயிற்று புண்,வயிற்றில் உள்ள புழுக்கள் இவற்றை நீக்கும். பசியை அதிகரிக்கும். இதன் சாறு, வாந்தியை நிறுத்தி, பசியை துண்டை செய்யும். உடல் சூடு தனியா தினம் ஒரு நர்த்தம்பழம் சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். புத்துணர்ச்சியாக இருக்கும். சீதகழிச்சல் உடையவர்க்கு இதன் தோலை தேனில் ஊற வைத்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
பழத்தின் மணம்
நல்ல மணம் கொண்ட இந்த நார்த்தங்காய், எலுமிச்சை வகையை சார்ந்தது. நன்கு பழுத்த பலம் மஞ்சள்,பச்சை கலந்து காணப்படும். புளிப்பு மிகுதியாக இருப்பதால் இதை அதிகம் விரும்புவதில்லை. இதன் தோல் பகுதி தடிமனாகவும், சாறு நிரம்பி இருக்கும் இப்பழமானது கிராம மக்களின் சாத்துகுடியாகும். நார்த்தயில் மலர்,கனி,வேர் அனைத்தும் பயன் கொண்டவை.
அமிலங்கள் கொண்டது
பழத்தின் மணம் மற்ற மணத்தை கட்டு படுத்தும் குணம் உண்டு. சித்த மருத்துவம் மற்றும் உணவில் அதிகளவு பயன்படுகிறது.பழத்தின் உள்ளே எட்டு அல்லது பத்து சுளைகள் காணப்படும். பெரும்பாலும் உறுகாவாக பயன்படுத்துகின்ற னர். கனியில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், நியசின், அலைனைன், அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், சிட்ரல், வெலன்சிக் நார்டெண்டாட்டின், லிமோனின், குளுட்டாமிக் அமிலம், நாரிங்கின் ஆகிய அமிலங்கள் உள்ளன.
வயிற்று புண்
நார்த்தங்காய் தேவையான அளவில் நறுக்கி உப்பு போட்டுஒரு ஜாடியில் அல்லது மண் பானை அல்லது கண்ணாடி பாட்டிலில் இட்டு, துணியால் மூடி வெயிலில் வைத்து எடுக்கவும். இதை இருப்பது நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து இதை காலை மாலை சாப்பிட்டு வர வயிற்று புண் குணமாகும். உடலுக்கு நல்லது செய்யும் இது போன்ற உணவுகளை வரம் இரு முறை எடுத்து கொள்ளலாம். உறுகாவாக செய்து தினமும் பயன்படுத்தலாம்.
Pingback: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!! ஏன் சொன்னார்கள்…?? | SlateKuchi