மருத்துவம்

வியக்க வைக்கும் நன்மைகளைத் தரும் வெந்தய டீ…!

வெந்தயம் சமைக்கும் உணவுகளில் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. வெந்தயம் உடல் சூட்டை குறைக்க கூடியது என்பதுதான் பலருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களை மிக எளிதில் குணமாக்கும் ஆற்றல் வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை சமைக்கும் உணவுகளில் பயன்படுத்துவது மட்டுமில்லாமல் வெந்தயத்தை கொண்டு டீ தயாரித்து சாப்பிடலாம். அப்படி இந்த வெந்தயத்தை கொண்டு டீ போட்டு குடித்து வரும்போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன அப்படிங்கறது தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கொலஸ்ட்ரால்

 நம் உடலில் இருக்கிற கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்து வருவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை குடித்து வர இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு சீராகும்.

குடல் தூய்மை

குடலின் உட்பகுதியில் படிந்து இருக்கும் நாட்பட்ட கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் இந்த வெந்தயத்திற்கு உண்டு. வெந்தய டீயை தொடர்ந்து குடித்து வர இரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. காலையில் உடலை சுத்தப்படுத்த  வேண்டும் என்று நினைக்கிறவங்க இந்த வெந்தய டீ குடித்து வர மிகவும் நல்லது. 

இதய நோய் வராமல் தடுக்கும் 

வெந்தய டீயில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது. இது ரத்தக் குழாயில் படிந்து இருக்க கூடிய கெட்ட கொழுப்பை கரைப்பதோடு மீண்டும் படியாமல் தடுக்கும். இதன் மூலமாக இருதய சார்ந்த பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும். 

உடல் எடையை குறைக்கும்

பொதுவாக வெந்தயத்தின் கரையக்கூடிய நார்ச்சத்து சால்உபுல் பைபர்,  கரையா நார்ச்சத்து நான் சால்உபுல் இருக்கிற இரண்டு வகை நார்ச் சத்துக்கள் அடங்கி இருக்கும். அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள் காலை வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை குடித்து வர கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கொழுப்பை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும். இதில் இருக்கக்கூடிய கரையா நார்ச்சத்து  மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். 

பெண்களுக்கு மிகவும் நல்லது

டீன்ஏஜ் பெண்கள் வெந்தய டீ குடித்து வர இது உடலின் ஹார்மோன் உற்பத்தி சீராக்கி கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக வலி மற்றும் வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கிறவங்க வெந்தய டீ குடித்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

ரத்த சோகையை குணமாக்கும்

இன்றைய காலத்தில் பல குழந்தைகள் ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு ரத்த சோகை போன்ற பிரச்சினையால் அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்சினை அவதிப்படுறவங்க காலை வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்து வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் புதிய ரத்தம்  ஊற உதவி செய்யும். இதன் மூலமாக ரத்த சோகையை குணமாக்கும். 

 இத்தனை நன்மை தரும் வெந்தய டீ சுலபமாக செய்யலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு  இறக்கினால் வெந்தய டீ தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *