எப்பேர்ப்பட்ட சிரமத்தையும் போக்குமாம் சீரகம்..!!
தினமும் பயன்படுத்தும் அஞ்சறை பெட்டியில் மிகவும் எளிதான மற்றும் விளைவான ஒரு பொருள் தான் சீரகம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்பட்டு, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். சீரகத்தில் மெட்டபாலிசம் அதிகரிக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி அச்சிடன்ட்களும் ஏராளமாக உள்ளன.
சீரகத்தின் பயன்கள்
வாய்வு தொல்லை, ரத்த சோகை, செரிமானம் மேம்படுவது,
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைபடுத்தும், மாரடைப்பு தடுப்பது போன்ற சக்தி சீரகத்துக்கு உண்டு. சிறிது சீரகம், திப்பிலி பொடி ரெண்டும் தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல் குணமாகும். சீரக பொடியை நீரில் தேனுடன் கலந்து குடிக்க உடலில் தேவையற்ற கொழுப்பை கரைக்கும். உடல் எடை சீராகும்.
உடல் எடை குறையும்
தினமும் ஒரு ஸ்பூன் சீரக பொடி தயிரில் சேர்த்து உட்கொள்வதால் உடல் எடை குறையும். ரெண்டு டேபிள் ஸ்பூன் சீரகத்தை ஒரு டம்பளர் தண்ணீரில் இரவு முழுதும் ஊற விடவும். மறுநாள் காலை இதை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து குடித்து வருவதால் உடல் எடை குறையும். தினமும் காய்கறி சூப் செய்து அதில் சீரக பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
வாழைப்பழத்துடன் சீரக தூள் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்த நீரில் சீரக தூள் கலந்து குடித்து வர உடல் எடை நல்ல மாற்றம் தெரியும். எலுமிச்சை, இஞ்சி உடல் எடை குறைக்கும் சக்தி கொண்டவை இதனுடன் சீரகம் சேரும் போது இன்னும் பலன் தெரியும்.
ஒரு பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உங்களுக்கு பிடித்த காய்கறி கலவைகள் எடுத்து கொண்டு அதனுடன் சீரகம் சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து உப்பு, மிளகு சேர்த்து வேகவைத்து வடிதல் காய்கறி சூப் தயார். இதை இரவில் குடித்து வருவதால் விரைவில் எடை குறைய தொடங்கும்.
இத்தனை நன்மைகளா
நாம் தினமும் உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம், உடல் எடையை குறைப்பதற்காக இதை தொடர்ந்து மேற்குறிய வகையில் சாப்பிட்டு வர, பதினைந்து நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியும். மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இத்தனை நன்மைகள் சீரகத்தில் உள்ளன.
மேலும் படிக்க
Pingback: அருமருந்தாகும் உலர் திராட்சையை கண்டால் விடாதீங்க! | SlateKuchi