ஆன்மிகம்ஆலோசனை

Prathosham benifits : புத்திர பாக்கியம் கிடைக்கும் புதன் பிரதோஷத்தின் பயன்கள்

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு உரிய மிக சக்தி வாய்ந்த நாளாகும் பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கினால் நாம் கேட்கும் வரங்களை அவர் நமக்கு தருவார் என்பது ஐதீகம்.

பிரதோஷத்தின் வகைகள்

பிரதோஷங்களில் பல வகை உண்டு. பொதுவாக மாதத்தில் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம். மேலும் திங்கள் பிரதோஷம் ,செவ்வாய் பிரதோஷம் ,புதன் பிரதோஷம் , வியாழன் பிரதோஷம் ,வெள்ளி பிரதோஷம் ,சனி பிரதோஷம், ஞாயிறு பிரதோஷம் என ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இளமையில் பிரதோஷம் வரும் ஒவ்வொரு தின பிரதோஷத்திற்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் கிடைக்கும் இன்று நாம் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லும் புதன் பிரதோஷத்தின் பலன்களை பார்க்கலாம்.

புதன் பிரதோஷம்

பிரதோஷங்களில் மிகவும் சக்தி வாய்ந்த முக்கிய பிரதோஷமாக கருதப்படுவது புதன் பிரதோஷம் ஆகும் 16 வகை செல்வங்களை அள்ளித்தரும் புதன் பிரதோஷம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது புதன் பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வில் 16 வகை செல்வங்களை சிவபெருமான் நமக்கு அள்ளித் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

புதன் பிரதோஷம் என்ன செய்யலாம் ????

  • பொதுவாக பிரதோஷம் தினத்தன்று மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் காணக் கிடைக்காத பொக்கிஷம் என்று சொல்லக்கூடிய பிரதோஷ தினத்தன்று அபிஷேகத்தை பார்ப்பது மிகவும் சிறப்பாகும்.
  • உங்களால் முடிந்தால் பிரதோஷ தினத்தன்று அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களை பாருங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்தாலே அதற்கான பலன் கிடைக்கும்.
  • நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் புதன் பிரதோஷத்தன்று விரதம் இருந்து நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையும் சிவபெருமானுக்கு வில்வமாலையும் சாத்தி வழிபட்டால் விரைவில் திருமண யோகம் கைகூடும்.
  • புத்திர பாக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் புதன் பிரதோஷத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு உங்கள் விரதத்தை தொடங்கி விட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவபுராணம் சிவ நாமம் ஆகியவற்றை பாசுரம் செய்து மாலை வேளையில் கோவிலுக்கு அல்லது வீட்டிலேயே பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவதால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • பொதுவாகவே புதன் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது நீங்கள் அன்றைய தினம் விரதம் இருந்து சிவபுராணம் படித்து ஆலயத்திற்கு சென்று வர வீட்டில் ஒற்றுமை நிலவும் , உடல் ஆரோக்கியம் மேம்படும், வீட்டில் உள்ள சங்கடங்கள் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
  • மேலும் புதன் பிரதோஷத்தன்று விரதம் இருக்க முடியாதவர்கள் சிவபெருமானை மனதார நினைத்து சிவ நாமத்தை சொல்லி வழிபட்டாலே 16 வகை செல்வங்களை சிவபெருமான் அள்ளித் தருவார் என்பது ஐதீகம்.
  • தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், சிவ கணங்களில் ஒருவராகி சிவனுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *