ஆரோக்கியம்மருத்துவம்வாழ்வியல்

ஆரோக்கியம் தரும் பாதாம்

பாதாம் இன்றைய அவசர அதிவேக உலகில் அவசியமாகின்றது. பாதாம் பருப்பு ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகின்றது.

பாதாம் பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளது. பாதாம் பருப்பில் இருக்கும் புரோட்டின் மற்றும் கால்சியம் நமது ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். பாதாம் பருப்பை சாப்பிடுவாதால் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு வலிமை கிடைக்கும்.

பாதாம் பருப்பில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதனால் அனிமியா போன்ற நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் பாஸ்பரஸ் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

வைட்டமின்கள் நிறைந்த பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ காணப்படுவதால் நமது சருமம் சிக்குன்னு பொலிவு பெறுவதற்கும் முடி வளர்ச்சி பெறுவதற்கும் உதவுகிறது. இவ்வளவு மகிமைகள் இருப்பதால்தான் இப்பருப்புக்கு எப்பவும் மவுசு அதிகம் கொஞ்சம் விலையும் அதிகம்தான்.

கர்பிணிகளுக்கு பாதாம்

பாதாமில் ஒமேகா த்ரீ பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் பாதாம் பருப்பை தினமும் உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

உடல் எடை குறைக்கும்

பாதாம் உடல் எடையானது குறைக்கும். பாதாம் பருப்பில் நல்ல கொழுப்புகள் உற்பத்தி ஆகிறது அது மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.

பாதாம்பருப்பை நாம் அப்படியே உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அதில் ஆன்ட்டி நியூட்ரிஷன் கள் உள்ளது அதாவது அதில் பைட்டிக் ஆசிட் மற்றும் tanning உள்ளது. இந்த ஆசிட் களினால் நமக்குத் தேவையான நியூட்ரிஷன் கள் நமக்கு கிடைக்கப் பெறாது. பாதாம்பருப்பை இரவு நேரங்களில் அதாவது ஏழு மணி அல்லது 8 மணி நேரம் ஊறவைத்து அதில் உள்ள தோல்களை நீக்கி அதை சாப்பிட வேண்டும். பாதாமில் இருக்கும் நியூட்ரிஷன்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது. இனிமேல் பதாம் நம்ம வீட்டுலயும் வாங்குவோமுல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *