பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்:- இந்தியா புறக்கணிப்பு
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கம் மற்றும் நிறைவு விழாவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் இருக்காது என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் தொடர்புடைய சீன ராணுவ வீரர், ஒலிம்பிக் சுடரை ஏந்தி சென்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசளவில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லை என அறிவித்திருந்தன. சீனாவுடனான எல்லைத் தகராறு உட்பட பல்வேறு முரண்பாடுகள் நடப்பில் இருந்தபோதிலும், இந்த போட்டியில் இந்திய அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் இருக்கும் என இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.