பீட்ரூட் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்
தினமும் பீட்ரூட் அதிகம் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். வளரும் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவது நல்லது. இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.
பீட்ரூட் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்.
தேவையான பொருட்கள் : பீட்ரூட் துருவியது ஒரு கப், வேகவைத்த சாதம் ஒரு கப், வெங்காயம்-1, கிராம்பு-2, பச்சை மிளகாய் 3, கொத்தமல்லி சிறிதளவு, ஏலக்காய் 6, பட்டை 2 இன்ச், நட்ஸ் 5 டேபிள்ஸ்பூன், (பாதாம் முந்திரி உலர் திராட்சை கலவை) நெய் 3 ஸ்பூன்.
செய்முறை விளக்கம் : பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். அரிசியை கழுவி அடுப்பில் வைத்து உதிரியாக வேக வைத்து எடுத்த ஆறிய சாதம் ஒரு கப் எடுத்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும், துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பீட்ரூட் வேக தண்ணீர் தெளித்து 8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின் தீயை குறைத்து ஆற வைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்த பின் இதன் மேல் நட்ஸ், கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும். சூடான சத்தான பீட்ரூட் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம் தயார்.