பீர் விலை உயர்வு..? மதுப்பிரியர்கள் ஷாக்:
ரஷ்யா-உகரைன் இடையேயான போருக்கு மத்தியில் மதுப்பிரியர்களை கவலையளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர், மதுபானங்களின் முக்கிய மூலப்பொருளான பார்லியின் விலை மற்றும் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்தியாவில் பீர் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ரஷ்யா-உக்ரைன் மோதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல மாநிலங்கள் ரஷ்ய தயாரிப்பு மற்றும் ரஷ்ய-பிராண்டட் ஸ்பிரிட்களை புறக்கணிப்பதால் ஓட்கா விலையை செலுத்த வழிவகுத்தது.
அமெரிக்கா, உக்ரைனுக்கு அடுத்தப்படியாக பார்லி ஏற்றுமதியில் ரஷ்யா உள்ளது. உக்ரைன் உலகளவில் மால்ட் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் போர் தொடர்ந்தால் இதற்கான விநியோகம் தடைபடும் என்றும் இதனால் பார்லி, மற்றும் மால்ட் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவும் பார்லியை உற்பத்தி செய்கிறது மற்றும் நாட்டில் உள்ள பல மதுபான ஆலைகள் பார்லியின் உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே சார்ந்துள்ளது. இருப்பினும், பார்லியின் உலகளாவிய விலைகளால் உள்நாட்டு விலைகளிலும் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.