உங்க மேல கமகமனு எப்பவுமே வாசம் கமலனுமா?.. இத செய்ங்க..!!
நாம் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் பலரும் உபயோகப்படுத்துகிறோம். நாம் வாங்கக்கூடிய வாசனை திரவியங்கள் நமக்கு ஒத்துக் கொள்ளுமா? என்று பார்த்து தான் வாங்க வேண்டும். ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒத்துக் கொள்ளாது, ஒரு சில வாசனைகள், அதனால் எப்பொழுதும் வாசனை திரவியங்களை வாங்கும் போது, அதிக கவனம் செலுத்தி வாங்குங்கள். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதை அடுத்த தடவை உபயோகிக்காதீர்கள்.
வாசனை திரவியங்களை வெவ்வேறு வெப்பநிலையில் ஆவியாகக் கூடிய பல திரவியங்களைக் கொண்டு தயாரிக்கின்றனர். இதில் பலவகை உண்டு. யூடி டாய்லெட் முதல் வகை ஆல்கஹாலின் சதவீதம் உயர்ந்து காணப்படுவதால் உடனே ஆவியாகி விடுகிறது. யூடிகோலன் இரண்டாம் வகையைச் சேர்ந்த இது சிறிது நேரம் கழித்தே ஆவியாகும். மூன்றாவது யூடி பர்ஃப்யூம் நன்கு செறிவூட்டப்பட்ட உண்மையான வாசனை திரவியம் இதனுடைய விலையும் சற்று உயர்வு. நாம் தினம்தோறும் உபயோகப்படுத்தும் பர்ஃப்யூம் சரியான முறையில் தான் பயன்படுத்துகிறோமா அது பத்தி தெரிஞ்சுக்கலாம்.
நம் உடலில் சூரிய ஒளிபடும் இடங்களில் உபயோகித்தல் கூடாது. ஏன்னா அது தோள் எரிச்சலையும், அரிப்பையும், தழும்புகளையும், வரவழைக்க வழி செய்யும். இதனால் தான் சூரிய ஒளி படும் இடங்களில் பர்ஃப்யூம் உபயோகிக்கக் கூடாது. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை வாசனை அதிக நேரம் இருக்கும் என்பதால் வறண்ட சருமம் உள்ளவர்கள் சிறிது கிரீமை பூசி கொண்டு அதன் பின் திரவியங்களை உபயோகியுங்கள். இப்படி செய்யறதால வாசனை நீண்ட நேரம் இருக்கும்.
வாசனை மேலே எழும்பும் தன்மை கொண்டது. அதனால் மற்றும் கால் முட்டிகளுக்கு பின்னால் தடவிக்கொள்ளலாம்.
மணிக்கட்டு மற்றும் கை முட்டியில் உட்பகுதி போன்ற நாடித்துடிப்பு இடங்களில் வாசனை திரவியங்களை அடிப்பதால், அங்கிருக்கும் சூட்டினால் திரவியத்தை விரைவில் ஆவியாக வாய்ப்பிருக்கு அதனால இந்த மாதிரி இடங்கள்ல உபயோகிக்க கூடாது.
குளித்து முடித்தவுடன் நமது உடலில் உள்ள துவாரங்கள் விரிவடைவதால் திரவியத்தை நம் கை நீட்டும் தூரத்தில் இருந்து உடம்பில் படும்படி அடிக்கலாம்.
வாசனை திரவியங்களை சரியான முறையில் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
வீடு முழுக்க நறுமணம் வீச
நிறைய பேருக்கு வாசனை திரவியங்கள் ரொம்ப பிடிக்கும். பார்க்கிற வாசனை திரவியங்கள் எல்லாம் வாங்கி வெச்சிருப்பாங்க. தினமும் ஒவ்வொன்றும் உபயோக படுத்துவாங்க. சில நேரங்கள்ல பர்ஃப்யூம் மிச்சம் ஆயிடும். இந்த மாதிரி மீதமுள்ள வாசனை திரவியத்தை எப்படி பயனுள்ளதாக உபயோகப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
விளக்கேற்றும் திரியை திரவியத்தில் நனைத்து விளக்கு ஏற்றினால் வீடு முழுக்க நறுமணம் வீசும்.
குளிர் சாதனங்களில் ஏசி சிறிதளவு தெளித்தால் வீடு எங்கும் நறுமணம் வீசும். பஞ்சில் நனைத்து திரவியத்தை தலையணை உறையில் வைத்தால் நறுமணம் கூடும். அழைப்பிதழ்களில் நான்கு மூலைகளில் வாசனை திரவியத்தை தடவி அனுப்புவதால் திறக்கும் போது நறுமணம் கமழ ஆரம்பிக்கும். ஒரு திரவியத்தை பல்ப்பின் மீது தெளித்தால் விளக்கு எரியும் போது வீடு எங்கும் நறுமணம் வீசத் தொடங்கும்.