கூந்தல் செழித்து வளர னுமா?..
தலைமுடி நன்கு செழித்து வளர, கூந்தல் நுனி வெடிப்பு நீங்க, பொடுகு பேன் தொல்லை நீங்க வேண்டுமா? கூந்தல் வறட்சியை தடுத்து, இளநரையை போக்கி, வழுக்கையை தவிர்ப்பதற்கு இதை பாலோ பண்ணுங்க.
கூந்தல் செழித்து வளர : சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து காலை எழுந்ததும் அதை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை தயிருடன் சேர்த்து தலைமுடி முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து நன்றாக அலசுங்கள்.
இது கூந்தலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, கண்களுக்கும், உடலுக்கும், குளிர்ச்சி ஆக இருக்கும். மழைக் காலங்களில் இதை அதிக நேரம் உபயோகிக்க க் கூடாது. வெந்தயம் குளிர்ச்சி என்பதால் சளித் தொந்தரவு ஏற்படும்.
கூந்தல் நுனி வெடித்திருந்தால் : ஃபிலிட் ஹேர் கட் செய்து கொள்ள வேண்டும். அதாவது வெடித்த முடிகளை ட்ரிம் செய்து கொள்ளவும். ஆறு மாதங்களுக்கு மறுபடியும் வெடிக்காத. கூந்தலை போஷாக்காக வைத்திருக்க ஷாம்பு அதிகம் உபயோகிக்க கூடாது. ஷாம்பு கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும்.
பொடுகு நீங்குவதற்கு : வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். படுக்கை விரிப்பு, தலையணை உறை, சீப்பு போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள். தேங்காய் பால், எலுமிச்சை பழம் பிழிந்து மண்டையில் படும் படி நன்றாக தடவி 20 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளை முள்ளங்கியில் சாறெடுத்து, தலையில் பூசி 10 நிமிடம் கழித்து அலசலாம். வாரம் ஒரு முறையாவது பொடுகு போகும் வரை இதை தொடர்ந்து செய்து பாருங்கள்.
பேன் தொல்லை நீங்குவதற்கு : வேப்பிலை, துளசி இரண்டையும் அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து அலசுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து பார்ப்பதால் வாறிவிட்டால் பேன் தொல்லையை ஒழிந்து விடும்.
முன் தலையில் வழுக்கை விழுகிறதா: கவலைய விடுங்க. தலையை மேல் நோக்கி தூக்கி வருவதை தவிர்த்து விட இருக்கமா பின்னி கிளிப் அல்லது ஹேர்பேண்ட் போடக்கூடாது. இரவு படுக்கைக்கு முன்னாடி தினமும் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து தலையில் நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கூந்தலை அலசலாம். அழுக்கு பொடுகு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
முடி உதிர்வதைத் தடுப்பதற்கு வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்யுங்கள். சிறிதளவு துவரம் பருப்பு, கசகசா, வெந்தயம் கறிவேப்பிலை ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து முட்டையோடு சேர்த்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து அலசுங்கள்.
கூந்தல் வறட்சியைத் தடுப்பதற்கு : தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை லேசாகச் சூடு படுத்தி தலை முழுவதையும் நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். வெண்ணீரில் நனைத்து பிழிந்த டவலை தலையில் பலமுறை ஒற்றி எடுக்கவும். பிறகு சுத்தமான சீயக்காய் அல்லது மூலிகை பவுடர்கள் கூந்தலை அலசலாம்.
இளநரை நீங்குவதற்கு : நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன். ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் அனைத்தையும் கலந்து தலையில் நன்றாக படும் படி தடவி, ஒரு மணி நேரம் ஊற விட்டு கூந்தலை அலசுவது, இளநரையை போக்க முடியும்.