அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

அழகுக்கு அழகு சேர்க்க வேண்டுமா..!!

நாம் நம் அழகை எப்படி அதிகப்படுத்துவது, அழகுக்கு அழகு சேர்ப்பவை எது. அழகாக இருப்பவர்களை விட தன்னை அழகாக காட்டிக் கொள்பவர்களுக்கு தான் இப்பொழுது வெளி உலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது. என்பது தான் உண்மை. அதன் படி உங்களை அழகானவர்களாக காட்டிக் கொள்வதற்கு என்ன செய்யலாம் வாங்க உங்களுக்கான டிப்ஸ் இதோ.

முகம் முதல், பாதம் வரை அனைத்தும் தன் அழகை வெளிப்படுத்தக் கூடியவை. முகத்தை மட்டும் கவனிக்காமல் முகம், கழுத்து, தோள்பட்டை, கை, பின்னழகு, விலா எலும்பு, இடுப்புகள், கால்கள், தொடைகள், பாதங்கள் என்று அனைத்தையும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

கழுத்து : கழுத்தை எப்போதும் நேராக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை உயரமாகவும், மரியாதைக்கு உரியவராகவும் காட்டும்.

தோள்பட்டைகள் : தூக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். சாதாரணமாகவே வைத்துக்கொள்ளலாம். உங்களை தன்னம்பிக்கை நிறைந்த அவராகவே காட்சியளிக்கும்.

கைகள் : கைகளை எப்போதும் உங்களுக்கு உடலுக்கு குறுக்கே கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்கள் தோற்றத்தை கூன் போட்ட மாதிரி காட்டும். எனவே அவற்றை உங்கள் உடலின் பக்கவாட்டில் தொங்க விட்ட படியே வைத்துக் கொள்ள வேண்டும். உடலோடு ஒட்டியபடி வைத்துக் கொள்ளாமல் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டால் எளிதாக காட்டும்.

விலா எலும்பு மேல் பக்கம் பார்த்த படி உங்கள் விலா எலும்பு பகுதியில் லேசாக தூக்கிய படி வைத்துக் கொள்ள வேண்டும். இளமையான தோற்றத்தை இது பெற்றுத் தரும்.

பின்னழகு எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். இது பழகப் பழகத் தான் வரும். குறிப்பாக உடல் பருமன் அதிகமானவர்கள் இப்படி வைத்துக் கொள்வதன் மூலமாக மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கலாம்.

கால்கள் : ஒட்டு மொத்த எடையும் இருக்கும் படி நிற்காதீர்கள். இது உங்கள் இன்னொரு காலை பேலன்ஸ் இலக்க செய்து உங்களை குட்டையாகக் காட்டும். இதை ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொடைகள் : முடிந்தவரை தொடைகளை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு தொடைகளையும் சேர்த்து பிடித்தபடி வைத்துக் கொள்ள வேண்டாம்.

பாதங்கள்: இரண்டு கால்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களிலும் உடலின் எடை சமமாக இருக்க வேண்டும். நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். நேராக நிமிர்ந்து நில்லுங்கள். கம்பீரமான தோற்றம் ஆட்டோமேட்டிக்காக கிடைக்க ஆரம்பிக்கும். இந்த அட்வைஸ் எல்லாம் உங்கள் அழகை மெருகேற்றும் எனவே இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *