முகத்திற்கு பவுடர் போடுபவரா?
பார்ட்டி, கல்யாண விழாக்கள், இன்னும் பல விசேஷத்துக்கு போகும் போது போட்டோவிற்கு அழகாக காட்சி அளிக்க உங்கள் முகத்திற்கு போட கூடிய இந்த வகையான மேக்கப்பில் மிகவும் கவனம் செலுத்துங்க. எந்த ஒரு விசேஷத்துக்கு போகும் பொது உங்கள் மனச ரிலாக்ஸா வைங்க. டென்ஷன் படபடப்பு அவசரம் வேண்டாமே. சிறிது நேரம் முன்னராக கிளம்புவதால் இதெல்லாம் தடுக்கலாம்.
தவிர்க்க முடியாத அயிட்டம்
முகத்திற்கு பவுடர் போடுபவரா? மேக்கப்பில் தவிர்க்க முடியாத அயிட்டம் என்றால் அது பவுடர். அது எந்த வகைகளில் எல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது. தெரியுமா? முகத்திற்கு பௌடர் போடும் போது தலையில் பவுடர் ஒட்டிக் கொண்டு வெள்ளையாக காட்சியளிக்கும் தலையை துடைத்தால் தலை கலைந்து விடும். எனவே ஹேர் பிரஷ்ஷால் தலையை மெதுவாக வாரி விடுங்கள் பவுடர் போய் விடும்.
இமைகள் அடர்த்தியாக
முகத்திற்கு போடும் பவுண்டேஷன் உடன் சிறிது பவுடரை கலந்து போடுங்கள். பவுண்டேஷன் பளிச்சென இன்னும் அழகாக தெரியும். கண் இமைகளில் மஸ்காரா தடவப் போறீங்களா? அதற்கு முன்பாக இமைகளில் பவுடரை லேசாக தூவ, இமைகள் அடர்த்தியாக தெரியும்.
ஐ ஷேடோ தடவும் போது சில சமயங்களில் அது கண்களுக்கடியில் வழியலாம். மேக்கப் போட்ட பிறகு அதை துடைத்தெடுப்பது சிரமம் . இதைத் தவிர்க்க முதலிலேயே கண்களைச் சுற்றி நிறைய பவுடரை தடவிக் கொண்டால் வழியும் ஐ ஷேடோவை துடைக்க எளிதாக இருக்கும்.
அதிகப்படியான எண்ணெய்
கண் இமைகளில் மஸ்காரா தடவ போறப்ப அதற்கு முன்பாக பவுடரை லேசாக தூவ இமைகள் அடர்த்தியாக தெரியும். தலையில் அதிகமாக எண்ணெய் வழிந்தால், கொஞ்சம் பவுடரை தலையில் சூடி துடைத்திடுங்கள். அதிகப்படியான எண்ணெய் எல்லாம் பவுடரால் உறிஞ்சப்படும்.
கண்களுக்கடியில் கருவளையங்கள் அசிங்கமாக தெரிந்தால் வெளியிடங்களுக்கு செல்லும் போது தர்ம சங்கடமாக இருக்கின்றது. என்றால் ஒரு காட்டன் பஞ்சில் பவுடரை தூவி கண்களுக்கு அடியில் லேசாக உருட்டுங்கள். கருவளையங்கள் மறைந்து விடும்.
பவுடர் போடும் போது இதையெல்லாம் கவனித்து போடுங்கள். இதனால் உங்கள் முகம் அழகாக இருக்கும்.