நச்சுன்னு நாலு டிப்ஸ் படிங்க.!
நம் உடம்பில் உள்ள எக்ஸ்ட்ரா சதைகளை குறைப்பதற்கு உண்டான சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம். பெண்களுக்கு பொதுவாக உடல் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திடீரென எடை கூடும். திடீரென உடல் இளைக்கும். உடல் பெருக்க வைப்பது சுலபம். ஆனால் உடலில் ஆங்காங்கே தென்படும் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது, பல பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய கவலையாக உள்ளது.
தசைகளை உறுதியாக்க
உடல் எடையை குறைக்க உங்களுக்கான சில உடற்பயிற்சிகள் கைகளில்.. ஒவ்வொரு முறையும் 10 முறைகள் சுழற்ற வேண்டும். அம்மியில் அரைத்து, தண்ணீர் இறைப்பது, குழாய் தண்ணீர் அடிப்பது, போன்ற சாதாரண வீட்டு வேலை செய்தாலே கைகள் அழகாக இருக்கும். ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது, போன்ற பயிற்சிகள் தொடைகளில்.. உள்ள தசைகளை உறுதியாக்கும்.
காலையிலும், மாலையிலும் பத்து முறை உட்கார்ந்து எழுந்திருப்பது, பலனளிக்கும். தையல் மெஷினில் தைப்பது தொடைகள் மற்றும் கால்கள் எடுப்பாக வைத்திருக்க உதவுகிறது. பின்னழகில்.. தினம் குறைந்தது பத்து தடவையாவது மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உட்காரும் போது நிற்கும் போது அப்போதெல்லாம் பின்பக்கத் தசைகளை இறுக்கி பிடியுங்கள். சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து விட்டு, தளர்த்துங்கள்.
நடப்பதற்கு அழுத்து கொள்ளாதீர்கள். எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அவ்வளவு உங்கள் பின் பக்க வளைவுகளை உறுதியாக்கும். இடுப்பில்.. உடற்பயிற்சி நிலையங்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இடுப்பிற்கு என பல்வேறு அளவுகளில் வளையங்கள் கிடைக்கும். அதை வாங்கி இடுப்பில் வைத்து சுற்றுங்கள்.
இடுப்பழகி ஆவீர்கள்
ஆரம்பத்தில் வளையம் இடுப்பில் நிற்காமல் கீழே வந்து தான் விழும். மேலும் பழக பழக சரியாக இடுப்பழகி ஆவீர்கள். தாடைகளில்.. தாடை எனப்படும் இவை பெண்களின் அழகை கெடுப்பது. தலையை நேராக வைத்துக் கொண்டு இருக்கவும். இடமாக மேலிருந்து, கீழாகவும் தலையை திருப்பவோ, காலையில் மாலையிலும் 10 முறை செய்யலாம். தலைக்குத் தலையணை வைத்துக் கொள்ளாமல் சமதளத்தில் படுத்து தூங்கவும்.