சுற்றுலா

மெரினாவும் மெருக்கூட்டும் சென்னையும்

சென்னைய சுற்றி பார்க்க வரும் எவராக இருந்தாலும் உலகின் மிக நீண்ட கடற்கரையான மெரினாவை பார்க்காமல் செல்ல முடியாது. மெரினா பல கலவைகளாய் இருந்து நம்மை மெரூகூட்டும்.

இயற்கையோடு இணைந்த மெரினாவில் சரித்திரமும் சாளர கலந்த அற்புதங்களை உங்களுக்கு சிலேட் குச்சி தொகுத்து வழங்குகின்றது. அவற்றையெல்லாம் படித்து பார்த்து உங்கள் சுற்றுலாவை சுலபமாக்குங்கள். வாருங்கள் மெரினாவில் பயணிப்போம்.

நிறை மின்னோட்டம் கொண்ட சென்னை  வந்து சேர்ந்துவிட்டேன். அப்பாட என்று இருக்கின்றதா ரயில்வே ஸ்டேசன் சென்னை சென்ட்ரலில் இறங்கினால் மெரினா பக்கமே, அல்லது சென்னை கோயம்பேடு வந்தால் அங்கிருந்து 35 முதல் 45 நிமிடத்தில் அண்ணா சதுக்கத்தினை அடையலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விசாரித்தால் விவரங்கள் எளிதாக பெறலாம். மேலும் கூகுள் மேப்கள் எளிதாக கிடைக்கின்றன. அதன் மூலம் நீங்கள் சென்றைடைய வேண்டிய இடத்தை எளிதாக செல்ல வழிகள் அனைத்தையும் கூகுள் காட்டும்.

மெரினா ஓர் அறிமுகம்:

சென்னை தமிழ்தாயின் தலைநகரமாக விளங்கும் இதயம் இதிலே தான் மெரினா. மேலே சொன்ன வரிகளின்படி ஓய்வில்லாமல் ஓடி கொண்டேயிருக்கும். அவரவர் இதயகத்தில் பல மகிழ்ச்சிகள், பல போட்டிகள் பல சோகங்கள் அனைத்தும் கலந்து இங்கு ஓடி கொண்டேயிருக்கிறர்கள். புது புது பாடங்களையும் வெற்றியையும் தோல்வியையும் அனுபவத்தையும் கட்டியணைத்து வாழும் பரபரப்பான வாழ்க்கையின் திடலே எங்கள் மெரினா, இது  சென்னையின் தாயின்மடி.

இங்குள்ள சிறப்பினை பார்த்து கண்களை கவிதையாய் பேசவைப்போம் வாருங்கள..

அதிசயமே வியந்துபோகும் மெரினாவின் அழகினையும் அதனுடன் இணைந்த சரித்திரத்தை வைத்து முதலில் சுற்ற தொடங்குவோம்.

மெரினா கருநிற கூந்தலை விடுத்து நீலநிற கூந்தல் கொண்ட நில அழகி. இங்கு தொழில் செய்ய வருபவருக்கும் தன்னை வர்ணிக்க வருபவர்க்கும் சிரிப்பை அலையாக கொடுக்கும் தாயக விளங்குகிறாள்.

மெரினா நாட்டின் பல தூண்கள் துயிலுறங்கும் கோட்டை, படிப்பின் சாயல் கற்று தரும் கல்வி சோலை, படிக்காத பாமரர்களின் ஐடி அலுவலகம், திறமைகளை வெளிக்கொண்டுவரும் கலை களஞ்ஜியம், உரிமையை தட்டிக்கேட்க தைரியம் கொடுத்த எங்களின் வாடிவாசல் என்று பல சாதனைகளை செய்துக்கொண்டே இருக்கும் உலகின் இரண்டாம் மிக பெரிய கடற்கரை “ மெரினா “.

மெரினா கருநிற கூந்தலை விடுத்து நீலநிற கூந்தல் கொண்ட நில அழகி. இங்கு தொழில் செய்ய வருபவருக்கும் தன்னை வர்ணிக்க வருபவர்க்கும் சிரிப்பை அலையாக கொடுக்கும் தாயக விளங்குகிறாள்.

மெரினாவுடன் பயணிக்கும் சரித்திரம்:  

 உலகின் மிக நீண்ட கடற்கரையான மெரினா இந்திய மற்றும் தமிழ் நாட்டின் வரலாற்று, மொழி வல்லுநர்களையும், அரசியல் தலைவர்களோடு, அன்றாட கூலி வேலை செய்யும் குந்தவி, சங்கவி, சரளா வரை அனைவரும் ஒருங்கே கொண்டு இயற்கையுடன் சரித்திரத்தை தன்னுடன் பயணித்து சமத்துத்தை கொண்டது மெரினா.

அண்ணா வாழ்க! அண்ண நாமம் வாழ்க:

அண்ணா வாழ்க! அண்ணா நாமம் வாழ்க என்ற கோசத்தை உச்சரித்த மூவர் உரங்கும் சாலை காமராஜர்  சாலை மெரினாவின் தொடக்கம் அண்ணாவின் சமாதியுடன் தொடங்கும் மிகச் சிறந்த  தலைவரான அண்ணாவை அடுத்து  அண்ணாவின் இதயக்கனியான எம்ஜிஆர் அவருடன் ஆளுமை தலைவி ஜெயலலிதா மற்றும்  அண்ணாவின் சீடரான கருணாநிதி இவர்களின் சமாதிகள் அவரகளின் சாதணைகளுகளின் இருப்பிடமாக இறுதி மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரியமே ! உன் சூது

தெரியாதவர்களிடம்

உன் ஸ்ரூபத்தை காட்டு !

இன உணர்ச்சியை

இலக்காதிருக்கும

என்னிடம் காட்டாதே

உன் இறுமாப்பை !

என்று கூறி இன வேறுபாடின்றி அன்றும்இன்றும் தன்னை பாக்க வரும் அனைத்தும் உறவினர்களையும் அரவணைக்கும் நம் மூத்த அண்ணன்

“ சாதிகள் இல்லையடா மனித “ என்று ஒன்றும் தெரியாத பாமரர்களுக்கு சாதிகள் இல்லாத சமுதாயம் உருவாக காரணமாக விளக்கப்போகும் குழந்தைகளுக்கும் விளக்கி கூறிய மக்கள் மனம் படித்த அண்ணா.

மீண்டும் இங்கு நீ வந்தால்

மீண்டு வரும் நல்வரவு

வேண்டுகின்ற நலமனைத்தும்

வேகமுற பல்கி விடும் ;

மூண்டு பெருகி நிற்கும்

மூடப் பழக்க மெலாம்

பூண்டோடு அழிந்து பின்னர்

பூத்து வரும் நல்லுலகு!

என்றும் எம்ஜிஆர்:

நீதியின்றி அழுத மூடநம்பிக்கைகளை விழ்த்தி தனக்கு பின் இந்த சமுதாயத்தை காக்க கடலலையாக சுழன்று கண்டெடுத்த முத்தே இன்றும் அன்றும் நம்மில் ஒருவராக திகழ்ந்த அந்த அறிஞர் வழியில் சென்ற  டாக்டர் எம்ஜிஆர் இன்றும் தன் குருவின் பின்சென்று கல்லறை அருகேயிலும் கல்வி கற்று கொண்டிருக்கின்றார்.

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதனையும் தக்க வைத்துக்கொள்வது அதைவிட கடினம். சினிமா அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசிவரை தக்கவைத்து கொண்ட பெருமைக்கூரியவர் எம்ஜிஆர் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டவர்,  என்றும் நீக்கமற நிறைந்தவர் இதுவே எங்கள் எம்ஜிஆர். என்று பெருமிதம் கொள்ளும் அளவிற்கு சிறந்தவர் ஆவார்.

 முதல் பெண்:

அண்ணாவின் சமாதியை தொடர்ந்து எம்ஜிஆர் அருகில் செல்வி ஜெயலலிதா மக்களால் நான் மக்களுக்காக நான் என்று ஆளுமை சிறந்த அரசி மக்களின் மதிப்புகுரியவர்  கம்பீரத்தின் பிறப்பிடமான  செல்வி ஜெயலலிதாவின் சமாதியை நாம்  பார்க்கலாம். 

தமிழ்நாட்டின் பூர்விகத்து பெண்ணாக

கன்னடத்து பைங்கிளியாய் வந்தாய்

கார்மேக கூந்தல் அழகில்

பார்போற்றும் அளவிற்கு உயர்ந்தாய்

உயர்வை உன் பணத்தின் வழி மட்டுமில்லாமல்

உன்குணத்தின் வழியிலும் சோடிதாய்

நீ தாய்மை அடையவில்லையென்றாலும் தமிழகத்தின் தாயக தோன்றினாய்

தாயுள்ளம் கொண்டு உதவிய உன் பாசத்தைப்பார்த்து

அனைவரும் அழுதுதமிழில் அம்மா என்றழைத்தோம்

இன்று காலத்தால் அழியாத காவியமாய் எங்கள்

கண்ணெதிரே மறைத்தாய் எங்கள் காவியதாய் என்னும் நீ எங்கள்  ஓவியமே !!

இதுவரை யாரும் உன்னை நெருங்கியதில்லை..

நீ ஒரு பெண்ணாக

பெருமிதப் படுத்திவிட்டாய் .

செல்வி ஜெயலலிதாவாக இருந்து

செல்லம்மாவாக தமிழ் நாடாண்டாய் ,,,

கல் நெஞ்ஜம் கொண்ட அரசியல் களத்தில்

கற்பாறையாய் இருந்தாய் நீ!!!

கடக்க முடியாத துயரம் கடந்திருப்பாய்

எத்தனைக் காற்றாற்று வெல்லம் உன்னை கடத்த வந்ததோ நீ கடந்தாய் இரும்பு கரம் கொண்டு !!!

உனது கம்பீரம்தான் உனதடையாளம்

உனது அரசியல் அறிவு மணிமகுடம் உனக்கு ..

உனது வாழ்கை பெண்களுக்கு ஒரு பாடம் ..

போய் வா தாயே

போர்களம் உனக்கு பூக்களம்.

செல்வி ஜெயலலிதா என்ற பெண்  கம்பீரத்தை  தொடர்ந்து கருணாநிதி முன்னாள் முதல்வர் எழுத்து, அரசியல், சினிமா துறையில்  நிகரற்ற அறிஞரானவர் அவரின் சமாதியும் மெரினாவில் உள்ளது. 

மெரினா இயற்கையுடன் சரித்திரத்தையும் தன்னுடன் இணைத்து தொடக்கத்தை காட்டுகின்றது.  இவர்கள் நால்வர் சமாதியை சுற்றி வந்து அருமை பெருமைகளை அசை போட்டால் குறைந்த பட்சம் 2 மணி நேரம்  ஆகும் மெரினாவின் அடுத்த பகுதிக்கு செல்வோம் வாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *