மனசு நிம்மதியா இருந்து வாழ்க்கையில் ஜெயிக்கனுமா?
எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய் நொடிகள் தானாகவே சரியாகி விடுங்க. உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அவ்வளவு சீக்கிரம் அண்டவிடாது தானே. உங்கள் உறவினரையும், நண்பரையும் போற்றி வைங்கள்.
எதிர்பார்க்காதீங்க
இல்லையேல் உங்கள் வாழ்க்கை தனிமைப்படும். எதிர்பார்ப்புக்கும், நட்புக்கும் உள்ள இடைவெளி தான் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த இடைவெளி அதிகமாக, அதிகமாக மன அழுத்தம் அதிகரிக்க தொடங்க காரணம். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீங்க. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்க.
அடிக்கு அடி, சரிக்கு சரி என்ற பொறாமை மனப்பான்மையை உதறித் தள்ளுங்க. பொறாமை தலையில் ஏறி விட்டால் நம்மை நாம் மறப்போம். மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய வேண்டுமென்ற குணம் தலைதூக்குங்க. ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய கூடிய மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்க.
வளர்ச்சிக்கு உறுதுணை
உங்கள் தராதரத்தை மேன்மையை விட்டுக் கொடுக்காதீங்க. அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருப்பதில் முன்னோடியாக இருக்க பாருங்க. இது தான் சமூகத்துக்கும் நல்லது. எந்த காரியத்தையும் செய்ய வேண்டுமென்றால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும். புத்திசாலித்தனத்துடன் நடப்பது நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
நடப்பதை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கையில் அர்த்தம் கிடைக்கும். கவலையை விடுங்க. எல்லோரும் சொல்வது ஒன்று தான் குழந்தைகளுக்கு காகத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்று இவர்களின் படிப்பிலும், நடத்தையிலும் விளையாட்டிலும் நம் கவனம் செலுத்த வேண்டும்.
மகிழ்ச்சியாக இருக்க
பெற்றோரிடமும், பெரியவர்களிடம், சக மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லி கொடுக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் மனதில் பதிந்துவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்.
பணிபுரியும் அலுவலக சூழல் குடும்பத்தின் நிலையில் மன வருத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்கு தீர்வு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து பிரச்சினையை முடித்தால் மனம் லேசாகும் மகிழ்ச்சியான தருணத்தில் ரசிக்க வேண்டியது ரசியுங்கள். குதுகலத்துக்கான நேரம் என்றால் அதை தவற விட்டுவிடக் கூடாது.
தேவைகளுக்கு பணத்தை செலவு செய்யுங்க
சம்பளம் வாங்கியவுடன் தான தர்ம காரியங்களுக்கு சிறிய தொகை ஒதுக்கி விடுங்க. அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். பொருள் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தால் வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு இடம் கொடுக்காமல் போய்விடுவோம்.
எதை எதையோ மனதுக்குள் போட்டு குழப்பி மண்டையை உடைத்து இருக்கும். வேலையையும் தள்ளி வைப்பதால் மன உளைச்சல் தான் நம்மிடம் அதிகமாய் குடிகொள்ளும். இதை அகற்ற பல்வேறு வழிகள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றை மேலே பார்த்தோம்.
செலவுகளுக்கு யோசிக்காதீங்க. மண்டையை பிய்த்துக் கொள்ளாதீங்க. உங்கள் தேவைக்கு நீங்கள் செலவழிக்க விட்டால் வேறு யார் செலவழிப்பது எனவே தேவைகளுக்கு பணத்தை செலவு செய்யுங்க. வாழ்வில் சந்தோசமாக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்க.