நீங்க டாப் ஆகணுமா? இந்த தகுதியை வளர்த்துக்கோங்க ..!!
ஒவ்வொருவரும் ஆளுமை மேம்பாட்டை வளர்த்துங்க. இறைவன் உங்களை படைத்த போது அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்பதை புரிந்து தான் படைத்திருக்கிறார்! என்பதை நம்புங்க. நீங்க நீங்களாக தனித் தன்மையோட இருங்க. நண்பர்களோட போட்டி போடாதீங்க. இதனால நம் நண்பர்களை வேகமாக இழக்க செய்யலாங்க. எப்பவுமே உடன் இருப்பவர்களை பார்த்து சிரிக்காதீங்க.
உடன் இருப்போர் உடன் சேர்ந்து சிரியுங்க. ஒரு தவறு நேர்ந்து விட்டால் உடனே வருத்தம் தெரிவித்துவிடுங்க. வேற ஒரு நல்ல தருணம் வரும் போது சொல்லலாம் என்று காத்திருப்பதால நிலைமை மோசமாகலா. நீங்க தலைமை நிலையில் இருந்தா எப்போதும் மற்றவர்களை பாராட்டிக் கொண்டே இருங்க. பார்வையாளர்கள் முன்னிலையில் நமக்கு கீழ் பணியாற்றுபவர்கள் குறித்து பேசவே கூடாதுங்க. அவர்களை தனிமையில் தான் திருத்த வேண்டும்.
ஆளுமை மேம்பாட்டை வளர்த்துக் கொள்ள
பிறரது சாதனைகளை பாராட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு போதும் யாரோ ஒருவரின் சாதனை உங்களுக்கு சொந்த மாக்கி போலி உரிமையை கொண்டாடாதீங்க. தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றாலும் நம்பிக்கை இருப்பது போல் நடியுங்கள். உங்கள் தோற்றம் தான் நீங்கள் உங்களைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும், என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
எனவே தலைமுடி படிய சீவாமல் அலங்கோல தோற்றத்துடனும் காட்சி அளிக்காதீங்க. உண்மை அறிவு என்பது முறையான பள்ளிகளில் மட்டும் இருந்து பெறுவதல்ல. சூழ்நிலைகளிலிருந்து, மக்களிடமிருந்தும் அனுபவ அறிவை தொடர்ந்து கற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
நற்பண்புகளை சோதித்தறிய
எவருமே நூற்றுக்கு நூறு நிறை குணம் உள்ளவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நற்பண்புகளை சோதித்தறிய வேண்டும். குறிப்பாக நீங்கள் நினைப்பதை சொல்லிவிட விரும்பும் போது பேசும் முன் இருமுறை யோசித்து பேசுங்கள். ஓசை என்பது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவரவர் பெயர்கள் மட்டுமே. எனவே பெயர்களை முடிந்தவரை நினைவில் வைத்துக்கொண்டு, பெயரிட்டு அழைப்பது உத்தமம்.
உங்கள் அஜீரண கோளாறுகளை எல்லாம் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். எப்படி இருக்கிறீர்கள் என அவர்கள் கேட்பது வாழ்த்துதலே தவிர, வினா அல்ல!
துன்பத்தில் நோயில் மனத்தளர்ச்சியில் உள்ளபோது சிரிப்பே பக்க விளைவு இல்லாத மாமருந்து ஆகும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நாம் பிறருக்கு கூறும் அறிவுரைகளை நாமும் கடை பிடித்தாலே நாம் முழுமை அடைவதற்கான ஒரே வழி. சவாலை எதிர்கொள்ள வேண்டி இருப்பது நமது வெற்றியின் அளவுகோல் அல்ல. அந்த சவால் சென்ற ஆண்டில் சந்தித்த அதே சவாலா என்பதைப் பொருத்தது. நீங்கள் மற்றவர்களுக்கு சில நன்மைகள் செய்யும் போது பிரதிபலனா எதையும் எதிர்பார்க்காதிங்க. நன்றி என்ற ஒரு சொல்லைக்கூட எதிர்பார்க்காதிங்க. ஒரு சில நேரங்களில் எவரேனும் நன்றி தெரிவித்தால் அத மனநிறைவோடு ஏத்துக்கோங்க.