ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை சரிவிகித உணவு முறை
ஆரோக்கிய வாழ்விற்கு பலவகை உணவு முறைகளை பின்பற்றி உணவு கட்டுப்பாட்டில் இருக்க விரும்புபவர்கள் நிரந்தரமாக பதிலளிப்பது. ஒரு சில உணவு முறைகளை மருத்துவர்களால் உடல் நலத்திற்கு ஏற்ற சரிவிகித உணவு முறை என்று இதய நோய், நீரிழிவு நோய், போன்றவை வருவதை தடுக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படும் முறைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பெரும்பான்மையான உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படும் உணவு முறைகள் ஏதோ ஒரு வகையில் சமச்சீரற்ற உணவு வகையாக அமைவதுடன், சுவையிலும் நடைமுறையில் கடைபிடிப்பதில் குறை வைப்பதால் சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த உணவு முறைகள் கை விடப்படுவது வழக்கம்.
பல உணவு முறைகளை பயன்படுத்தி பார்த்து கைவிட்டவர்கள் ஏராளமானோர். உடல் எடையை குறைப்பதற்கு என்று பரிந்துரைக்கப்படும் உணவு முறைகள் யாவும் உண்பதை குறைக்கவும். பசி இல்லாமல் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும் உணவுகளை உண்பதற்கும், பரிந்துரைக்கும் கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதையும், வயிறு முழுமையடையும் உணர்வைத் தரும் புரதச் சத்துக்களையும், நார்ச்சத்துக்களை அதிகரிப்பதையும் முதன்மைப்படுத்தும்.
கொழுப்பு வகைகளை குறிப்பாக இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு வகைகளை கட்டுப்படுத்துவதை குறிக்கோளாகவும் கொண்டிருக்கும். இதன் அடிப்படையில் பல வகைகளில் மாற்றியமைத்து உணவின் அளவை குறைப்பது உடற்பயிற்சி அதிகரிக்கும் அறிவுரைகளும் கொடுக்கப்படும். ஆரோக்கியமான உணவை உடலுக்கு தேவையான முறையில் வயதுக்கு ஏற்ற வகையில் செய்யும் உடல் உழைப்பிற்கு தக்க அளவில் உண்பதும் உடற்பயிற்சியும் தொடர்ந்து மருத்துவர்களால் ஆரோக்கிய வாழ்விற்கான பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் இன்று வரை எந்த மாறுதலும் இல்லை. காலம் காலமாக பின்பற்றும் உணவு முறை தாவர உணவு முறையை முதன்மையாகக் கொண்டது. உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், அவரை, மொச்சை பயறு, பருப்பு, கொட்டை வகைகள், மூலிகைகள், மீன், கடல், உணவு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியன நிறைந்திருக்கும்.
முட்டை, பால் தயிர், பாலாடை கட்டி ஆகியவை மிகக்குறைவாக உட்கொள்ளப்படும். சிவப்பு இறைச்சி, அதிகக் கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்படும். இந்த உணவும் அதை உண்ணும் கலாச்சார முறையும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.