உஷார்…இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது…
பிப்ரவரி மாதம் நெருங்கிவிட்டது. பிப்ரவரியில் வங்கி தொடர்பான பணிகளைச் செய்ய வேண்டியிருந்தால், அடுத்த மாதத்தில் வங்கிகள் எப்போது மூடப்படும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பட்டியலின்படி, அடுத்த மாதம் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்படும். வங்கிக்கு செல்லும் முன் அதன் விடுமுறை நாட்களை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
பிப்ரவரி 2022 இல், பசந்த பஞ்சமி, குரு ரவிதாஸ் ஜெயந்தி மற்றும் டோல்ஜாத்ரா உட்பட ஆறு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, அந்த நாட்களில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர விடுமுறை இருக்கும். வரும் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்கள், இன்டர்நெட் பேங்கிங், நெட் பேங்கிங் மற்றும் பிற சேவைகளை அணுக முடியும்.
வங்கி விடுமுறை நாட்கள்:-
பிப்ரவரி 2: சோனம் லோச்சார் (காங்டாக் (சிக்கிம்) வங்கிகள் மூடப்படும்)
பிப்ரவரி 5: ஸ்ரீ பஞ்சமி/பசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்)
பிப்ரவரி 15: முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடப்படும்)
பிப்ரவரி 16: குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகரில் வங்கிகள் விடுமுறை)
பிப்ரவரி 18: டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கிகள் விடுமுறை)
பிப்ரவரி 19: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடும்)
வார இறுதி நாட்களிலும் வங்கிகள் மூடப்படும்:-
பிப்ரவரி 6: ஞாயிறு (வார விடுமுறை)
பிப்ரவரி 12: மாதத்தின் 2வது சனிக்கிழமை (வார விடுமுறை)
பிப்ரவரி 13: ஞாயிறு (வார விடுமுறை)
பிப்ரவரி 20: ஞாயிறு (வார விடுமுறை)
பிப்ரவரி 26: மாதத்தின் 4வது சனிக்கிழமை (வார விடுமுறை)
பிப்ரவரி 27: ஞாயிறு (வார விடுமுறை)
இதற்கு ஏற்றவாறு உங்களது வங்கி பணிகளை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது..