பெங்களூரில் பெருகும் கொரோனா வைரஸ்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது போல் கர்நாடகாவிலும் 5030 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர், என்ற தகவல்கள் கிடைக்கின்றன. கர்நாடகாவின் பெங்களூருவில் மட்டும் சுமார் 2207 பேர் பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்று உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் இன்று குணமாக 2 071 பேர் வெளியேறியுள்ளனர்.
பெங்களூருவில் மட்டும் சுமார் 50,000 பேர்வரை கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மே இறுதிவரை பெங்களூருவில் கொரோனா தோற்று சற்று தளர்ந்து காணப்பட்டது. அதன்பின் பெருகத் ஆரம்பித்தது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இங்கிருந்து வெளியே செல்பவர்கள் என போக்குவரத்து இருப்பதால் அதிகமான பரவல் காணப்படுகின்றது.
சிலிக்கான் வேலி சிட்டியான் பெங்களூர் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது, ஏற்கனவே இலட்சக்கணக்கானோர் இங்கிருந்து வெளியேறி உள்ளனர். பெங்களூரில் இருக்கும் ஐடி ஊழியர்கள் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். நகரமே வெறிச்சோடி கிடக்கிறது. இங்கு வீடு எடுத்துத் தங்கி இருக்கும் பலர் வீட்டைக் காலி செய்து வெளியேறியுள்ளனர். வீட்டிலிருந்து வெளியே வேலை செய்வதால் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
பல்வேறு இடப்பெயர்வுகள் பெங்களூரில் முதல்நாள் டவுனுக்கு முன்பே தொடங்கியது இதன்காரணமாக இந்தப் பரவல் குறைந்தது பெங்களூருவிலிருந்து வெளியேறும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த 10 நாட்களாகப் பெங்களூருவில் ஊரடங்கு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆரோக்கியமான உணவு மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதில் இங்குள்ள மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஜன நடமாட்டம் குறைவாக இருக்கின்றது இருப்பினும் கொரோனா பரவல் தோற்ற குறைந்தபாடில்லை