பிஎஸ்4 வாகனங்கள் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை
பிஎஸ்4 வகை வாகனங்கள் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த 2020 ஆண்டு ஏப்ரல் 1, முதல் விற்பனைக்கு வராது. அதாவது அதிக அளவில் புகைக்காத பிஎஸ்-4 வாகனங்கள் உற்பத்தி செய்யலாம்.
மாசு கட்டுப்பாடு கொண்ட பாரத் ஸ்டேஜ் 4 நார்ம்ஸ் எனப்படும் பி.எஸ்.4 தொழில்நுட்ப எஞ்சினை அனைத்து வாகனங்களில் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதன்படி 2020 ஏபர்ல் 1 முதல் பிஎஸ்-6 வகை வாகன்ங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்க்காக கால அவகாசம் கேட்டு வழக்கு தொடர்ந்த வாகன கம்பெனிகளின் கோரிக்கையை நீதிமன்றம் நீராகரித்தது. மேலும் ஏப்ரல் 1, 2020க்குபின் பிஎஸ்4 வாகங்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டு பிஎஸ்-6 வகை வாகனங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பி.எஸ்.4 எஞ்சினின் செயல்குறையில் வாகனங்களில் மித மிஞ்சிய புகைகள் மற்றும் எரிவாயு டேங்குகளில் திரவங்கள் ஆவியாதல் ஆகியவை மட்டுப்படுத்தப்படும் என ஏபரலில் 2017லிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
பி.எஸ்.4 மோட்டார் பைக்கில் அதிக திறன் கொண்ட செயலி மாற்றிகள் தேவைப்படுகின்றன. மற்ற சில வாகங்களில் தீங்கு நிறைந்த நைட்ரஜனை வெளியேற்ற இயற்கை வாயுவான ஆக்ஸிஜனும் தேவைப்படும்.
சுற்றுசூழல் காக்கும் பி.எஸ்.6 எஞ்சின் கொண்ட கனரக வாகனங்களில் செய்ல்பாடு மாற்றிகள் டிஒசி எனப்படும் டீசல் ஆக்சைடு கேட்டலிஸ்ட் இடம் பெற்றிருக்கும் பிஎஸ்-6 ரக வாகங்கள் பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பா கண்ட நாடுகளில் இன்னும் அதிக அளவில் கட்டுப்பாடு உள்ளது அதாவது அதனை தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கி தொழில்நுட்பம் அல்து செலக்டீவ் காடாலிடிக் ரெடக்சன் இடம்பெற்றுள்ளது. இது கனரக வாகனங்களுக்கானது இதனால் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கப்படும்.
ஏப்ரல் 1 முதல் பிஎஸ்4 எனப்படும் பாரத் ஸ்டேஜ் எமிசன் ஸ்டேண்டடு வகை வாகனங்கள் பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. காற்றுமாசுப்பாட்டை கட்டுப்படுத்தி சுற்றுப்புறசூழலை காத்து வளிமண்டல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரி செய்ய சுற்றுப்புறத்தை காக்க இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.