வந்தோரை ஈர்க்கும் வாழை இலை ரசம்
விருந்து என்றாலே கண்டிப்பாக அதில் ரசம் என்பது இடம்பெறும் என்னதான் வகைவகையான ரெசிபிகளை செய்து வைத்தாலும் ரசத்தில் தான் விருந்தே நிறைவு பெறுகிறது. ரசம் வெறும் உணவாக மட்டுமில்லாமல் அதில் சீரகம் மிளகு பூண்டு ஆகியவை சேர்க்கப்படுவதால் சீக்கிரமாக உணவுகளை செரிக்க உதவுகிறது. ரசத்தை சாப்பாட்டில் மட்டுமல்ல காய்ச்சல் சளி உள்ளவர்களுக்கு வெறும் ரசம் குடிக்கக் கொடுப்பது வழக்கம்..
இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த ரசம் மேலும் ஆரோக்கியத்தையும் சுவையையும் கூட்டினால் எப்படி இருக்கும் வாருங்கள் அதைப் பார்ப்போம்…
தேவையான பொருட்கள்
சிறிய வாழை இலை – 1
தக்காளி – 1
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் மிளகு தலா ஒரு தேக்கரண்டி புளி எண்ணை பூண்டு மஞ்சள் தூள் உப்பு கறிவேப்பிலை ஆகியவை தேவையான அளவு
கடுகு பெருங்காயம் வெந்தயம் ஆகியவை சிறிதளவு..
சுவையான வாழை இலை ரசம்
சுவையான வாழைஇலை ரசத்தை செய்யும் முறையை பார்ப்போம்..
இளம் வாழை இலை ,பூண்டு, மிளகு ,சீரகம் தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் ,வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
இந்த கலவையில் புளிக்கரைசல் ,உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க விடவும் பின்பு சேர்த்து இறக்கிவிடவும்.
சூடான சுவையான ஆரோக்கியமான வாழ்வை ரசம் ரெடி இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது போன்று தனியாக பழகலாம் காய்ச்சல் சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகவும் சுவையான விருந்தாக அமையும்….
மேலும் படிக்க : புதுசா ஒன்னு, கோதுமை மாவில் ரோல்..யாரும் பண்ணாத டேஸ்டி ரெசிபி