ஆகஸ்ட் 1 இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத்
இப்ராஹீமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தப்படுவதுண்டு. இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு.
அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படும் நபர்களில் ஒருவர் இப்ராஹிம். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்த இவர். வெளிநாட்டில் குழந்தை இல்லாமல் இருந்ததால் இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இஸ்மாயில் என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள் ஆவர். இப்ராஹீமின் மகன் இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்த பொழுது அவரைத் தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார்.
இதைப் பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம். அவரின் அனுமதியோடு பலியிடத் துணிந்த பொழுது. சிஃப்ரயீல் எனும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கி வைத்த இறைவன்.
இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமுக்கு என்று கட்டளையிட்டார். மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையில் இறுதியாக திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத். உலக நாடுகள் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள், இறைத்தூதர், இப்ராகிம் அவர்களின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையை போற்றும் நல்லதொரு நாளாக நபி, ஆதம் முதல் முகமது நபி அவர்கள் வரையிலும் தோன்றிய நபிமார்கள் பலரும் ஒவ்வொரு காலத்திலும் தோன்றி இறைத் தூதை அளித்து வந்துள்ளனர்.
தனது காலத்தில் நடந்த கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும் எள்ளளவு அச்சமின்றி இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்ராஹிம் அயல் நாடுகளுக்கு பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைவனே எல்லாம் அவனுக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறை பற்றோடு வாழ்ந்தவர்.