சினிமாசின்னத்திரைதமிழகம்யூடியூபெர்ஸ்

Bakiyalaxhmi serial update: 2 வருஷம் கழிச்சு பிறந்த அதிசய குழந்தை;பிறந்தவுடன் ஓடுமா என நெட்டிசன்கள்

நமது விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முதலிடம் பெற்று விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த நாடகம் பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எதார்த்தமாக கூறுவதால் அனைத்து பெண்களுக்கும் பிடித்த நாடகமாக உள்ளது. ஒரு ஆண் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும் ஒரு ஆண் எந்த சூழ்நிலையிலும் மாறுவான் என்ற உண்மையை வெளிப்படுத்தும் நாடகமாக பாக்கியலட்சுமி உள்ளது.

அப்பன் வழியில் மகனும்

பொதுவாக ஒரு வீட்டில் ஆண் பிள்ளைகள் இருந்தால் தங்களது அப்பாவை ரோல் மாடலாக வைத்து தான் பல விஷயங்களை செய்வர். ஒரு செயலில் அப்பா இருந்தால் என்ன முடிவெடுப்பார், அவர் தொழிலில் எவ்வாறு உழைக்கிறார் என்பதை பார்த்து தான் அவரது பிள்ளைகளும் வளரும். அதற்கு எடுத்துக்காட்டு தான் செழியன்.அப்பன் வழியில் மகனும் என்பது போல கோபி எந்த வழியில் பயணிக்கிறாரோ அதே வழியில் செழியனும் செல்கிறார். கோபியை போலவே ஒரு நல்ல வேலையில் இருந்தார்.எந்த முடிவாக இருந்தாலும் அவரைப் போலவே எடுத்து வந்தார்.

இதெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு ஆனால் இப்ப கோபி செஞ்ச அதே காரியத்தை இவரும் செய்றாரு. அது என்னன்னு உங்களுக்கே தெரியும். அப்பா எப்படி பொண்டாட்டியை விட்டுட்டு வேற ஒருத்தி கிட்ட போனாரோ அதவே இப்போ செழியனும் செஞ்சிட்டு வராரு. இது எங்க போய் முடியுமோ தெரியல. இருந்தாலும் சந்தேகப்பட்டு பாக்கியாவும் செழியனை கண்டிக்கிறாங்க. இருந்தாலும் செழியன் எடுக்கும் முடிவு என்ன என்று தெரியவில்லை.

மேலும் படிக்க : Vijay TV serial update: சினிமாவை மிஞ்சிய சீரியல்; வலையில் சிக்கிய கொலைகாரன் இனி நடக்கப் போவது என்ன???

ரெண்டு வருஷமாவா ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும்

இவ்வளவு பிரச்சினைகள் நிறைந்த பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க மறந்து விட்டோம். அதுதான் ஜெனியின் கர்ப்பம் இனி கர்ப்பமாகி இத்துடன் இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தை பிறக்கவே இல்லை ஒரு வழியாக ரெண்டு வருஷம் கழிச்சு இப்ப ஜெனிக்கு பெண் பிள்ளை பிறந்துள்ளது.

நெட்டிசன்கள் எல்லாம் என்ன ஒரு அதிசயம் இந்த பாப்பா ரெண்டு வருஷமா அவங்க அம்மா வயித்துல இருந்துட்டு வெளியில் வந்து இருக்கு வந்ததுமே நடக்க ஆரம்பிச்சிடுமோ இல்ல ஓடுமோ அப்படின்னு கலாச்சிட்டு வராங்க..

மேலும் படிக்க : Leo box office : லியோ பாக்ஸ் ஆபிஸ் ட்ரெய்லர் ஹிட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *