தாலியை கழற்றி வீசிய பாக்யா.. சந்தோஷத்தில் ராதிகா…
நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதற்கு எல்லா சீரியல்களும் நல்ல டிஆர்பி உடன் சூப்பர் ஹிட் அடிக்கும் சீரியல்களாக உள்ளது இந்நிலையில் டிஆர்பிகள் முதல் ரேட்டிங்கில் உள்ள பாக்கியலட்சுமி சீரியல் தற்போதுமிக பரபரப்பாக ஓடிக் கொண்டுள்ளது அடுத்து என்ன நடக்கும் நடக்கும் என்று மக்கள் யோசித்து ஒரு வழியாக விட்டனர்
இவ்வளவு காலம் கோபியை பற்றி பல சொல்லியும் பாக்யா அவர் மீது நம்பிக்கை வைத்து என் புருஷன் தப்பு பண்ண மாட்டாரு என்ன தவிர வேற யாரு பின்னாடியும் போக மாட்டாரு என்ன திட்டுவாரு கோபப்படுவாரு இருந்தாலும் என்ன தாண்டி வேறொரு பொண்ணு கிட்ட போக மாட்டாரு அப்படின்னு எல்லாத்துகிட்டையும் பாக்கியா ரொம்ப நம்பிக்கையா சண்டை போட்டுட்டு வந்தாங்க ஆனா அவர் வச்ச நம்பிக்கையெல்லாம் பொய்யா போகும் அப்படின்னு அவங்க ஒரு காலமும் நினைச்சதில்லை.
மேலும் படிக்க : விக்ரம் பட வெற்றிக்கு இவங்க தான் காரணமா???
இவ்வளவு பேர் சொல்லியும் நம்பாத பாக்கியா மருத்துவமனையில் வேறொரு பெண்ணுடன் கோபியை நேரடியாக பார்த்தவுடன் தான் நம்பினார் இந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத பாக்யா எப்படியோ வீடு வந்து சேர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் இதைப் பற்றி கூறினார் ஆனால் கோபியின் அம்மா ஈஸ்வரி இப்பொழுதும் இவ்வளவு நடந்தும் என் மகன் தப்பு செய்ய மாட்டார் நீ வேற யாரையோ பார்த்துட்டு இப்படி சொல்ற அப்படின்னு ரொம்ப நம்பிக்கையா பேசுவாங்க அடாத மழையிலும் விடாம குடை பிடிக்கிறியேமா அப்படின்னு ரசிகர்கள் ஈஸ்வரிய திட்டிவிட்டு வராங்க..
இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான சூழ்நிலைகள் பாக்கியா அடுத்து என்ன செய்யப் போகிறார் எப்பவும் போல் பாக்கியா “பேக்கியா’ கோபியை இப்பொழுதும் மன்னித்து விடுவாரா அல்லது இப்பொழுதாவது புத்தி வந்து கோபியின் மீது ஆவேசப்படுவாரா என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ப்ரோமோ மக்களை குஷிபடுத்தும் விதமாக இருந்தது. அப்படி என்ன ப்ரோமோ என்று பார்க்கிறீர்களா… ஆம் பாக்யா இனி நான் உன் கூட வாழ மாட்டேன் என்று சொல்லி தாலியை கழற்றி கோபி முகத்தில் வீசிவிட்டு வீட்டை விட்டு சென்று விடுகிறார். இதுதான் விஜய் டிவியின் ப்ரோமோவாக தற்போது உள்ளது. அடுத்து கோபியின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க : சுறாவிற்கு பிறகு விஜயுடன் நடிக்கும் தமன்னா