சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்

தாலி கட்டியதும் கோபியை அம்போன்னு நடுரோட்டில் விட்ட ராதிகா

நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சீரியலாக இப்பொழுது ஓடிக் கொண்டே இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான் . கோபி ராதிகாவிற்கு தாலியை கட்டுவாரா அல்லது பாக்யா அவரது குடும்பத்தினர் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவார்களா என்று இந்த இரண்டு வாரம் முழுவதும் அதையே எபிசோடாக மாற்றி சீரியல் ஓடிக்கொண்டிருந்தது அதையும் அத்தனை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டி ஒரு வழியாக கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியை கட்டி விட்டார் தாலியை கட்டியதோ ராதிகாவிற்கு, ஆனால் இனி பூம்பூம்மாடு போல தலையாட்டப் போவதோ கோபி தான் என்று சொல்லும் அளவிற்கு இனி வரப்போகும் எபிசோடுகள் இருக்க போகிறது. நாம் கோபி ராதிகா திருமணம் முடிந்த கையோடு ராதிகா திமிராக கோபியின் கையை பிடித்துக் கொண்டு பாக்யாவை பார்த்து முறைப்பாள். ஆனால் பாக்கியாவோ அதனை கண்டும் காணாமல் விட்டுவிடுவாள்.

மேலும் படிக்க : 96 சின்ன நாயகி ஜானுவின் குறும்படம்

பின்பு இவர்கள் ராதிகாவின் வீட்டிற்கு சென்று வாசலில் நிற்பார் ராதிகாவின் அம்மாவும் வாசலிலேயே நில்லுங்க அப்பதான் மத்தவங்களுக்கும் நீங்க அடிக்கடி இங்கு வந்த பிறகு இல்ல ராதிகாவோட புருஷன் தெரியும் என்று கூறியதும் பூம்பூம்மாடு தலையாட்டுவது போல் கோபி சரி சரி என்று கூறிக்கொண்டு வெகு நேரம் நடுரோட்டிலேயே நின்று கொண்டிருப்பார்.பின்பு புது மாப்பிள்ளை பெண்ணிற்கு அவர் நம் வீட்டில் பால் பலம் கொடுப்பர் இந்த சடங்கு முடிந்ததும் ராதிகாவோ அவ்வளவுதானே எல்லாம் முடிஞ்சிருச்சு நான் என் ரூமுக்கு போறேன் அப்படின்னு சொல்லிட்டு கல்யாணம் பண்ணதையே ஞாபகம் இல்லாத மாதிரி கோபியை அம்போன்னு அந்த அறையில் விட்டுவிட்டு ராதிகா சென்று விடுகிறார். அவர் பின்னாடியே அவர்கள் முழு குடும்பமும் எதுவும் கூறாமல் சென்று விடுகின்றனர். கோபியும் என்ன செய்வது என்று தெரியாமல் தவளை தன் வாயால் கெடும் யானை தன் தலையில் தானே மண்ணை வரி கொட்டிக்கொண்டே கூற்றாக அந்த அறையிலேயே அமைதியாக அமர்ந்து விடுவார்.

மேலும் படிக்க : பாகுபலி அடுத்து ஆதிபுருஷ்ஷில் பாக்கலாமுங்க்

இனி பாக்யாவின் அருமை போகப்போக கோபிக்கு புரியும் அங்கு நின்ற இடத்திற்கு அவர் கூறிய அனைத்தும் உடனே வந்துவிடும் அவர் சொன்னது தான் சட்டமாக இருந்தது ஆனால் இங்கோ இவர் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு இங்கு ஒரு மூலையில் உள்ளார் இந்த நிலையை அவர் கூடிய சீக்கிரம் உணர்ந்து பாக்யாவின் நல்ல மனதையும் நல்ல குணத்தையும் புரிந்து கொள்வார் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *