Bakiyalakahmi update : மீண்டும் மாலினியை தேடி போகும் செழியன்!!!
நம்ம பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது பரபரப்பாக ஓடி கொண்டு உள்ளது. யாருக்கு முதலில் இரண்டாவது திருமணம் நடக்கும் என்பதே இப்பொழுது கதையின் மைய கருத்தாக உள்ளது.
ஜெனியும் நானும் ஒன்னு இல்ல
ராதிகா பாக்கியாவிடம் கோபி என்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் நீங்கள் அவர் செய்த தப்புக்காக அவரை விவாகரத்து செய்தீர்கள் . இப்பொழுது அதே தவறை தான் உங்கள் பையன் செழியன் செய்திருக்கிறான் ஆனால் இப்போது மட்டும் நீங்கள் ஏன் ஜெனி பக்கம் நிற்காமல் செழியன் பக்கம் நிற்கிறீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு பாக்யா நானும் ஜெனியும் ஒன்னுமில்ல அதேபோல் கோபியும் செழியனும் ஒன்று கிடையாது இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது என்று பதில் அளித்து சென்று விடுகிறார்.
செழியனுக்கு கல்யாணம் பண்ண புரோக்கர் வந்தாச்சு
பாக்கியா வீட்டிற்கு ஒரு புது ஆள் வருகிறார் யார் என்று யார் எல்லாரும் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் செழியனுக்கு பொண்ணு பார்க்க வந்த புரோக்கர் என்று பாட்டி சொல்கிறார். இதை கேட்டதும் பாக்யா ,தாத்தா என அனைவரும் சிலையாக நின்று விட்டனர்.
செழியன் எனக்கு இன்னொரு கல்யாணம் என்ற பேச்சே இந்த வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பாக்யா எதற்கு இவ்வளவு அவசரம் கொஞ்சம் பொறுமையா தான் இருங்களேன் என சண்டை போடுகிறார் ஆனால் பாக்யா பேச்சு வீட்டில் எடுபடவில்லை.
மாலினியை தேடி போகும் செழியன்
கோபமாக சென்ற செழியன் நேராக மாலினி வீட்டுக்கு செல்கிறார் செழியன் பின்தொடர்ந்து எழில் மறைந்து நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கிறார். மாலினியை பார்த்து செழியன் இங்க பாரு பொண்ணுன்னு பாக்குறேன் இல்ல அவ்ளோதான் அப்படின்னு சொல்லி அடிக்கப் போறாரு.
நானாடி உன் பின்னாடி வந்தேன் எனக்கு கல்யாணம் ஆகலன்னு உன்கிட்ட எப்பவாவது சொன்னனா எல்லாம் தெரிந்திருந்தும் நீ தானே என் பின்னாடி வந்த. இப்ப எதுக்கு எல்லார்கிட்டயும் அப்படியே நான்தான் தப்பு பண்ண மாதிரி சொல்லிட்டு இருக்க உனக்கு அவ்வளவு தான் மரியாதை என மிரட்டுகிறார். இனி இதனால் மாலினி செய்ய போகும் குழப்பம் என்ன செழியன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்று பார்க்கலாம்.