Bakiyalakahmi serial update: பாக்கியாவை விட்டு நிரந்தரமாகப் பிரியும் பழனிச்சாமி
விஜய் டிவியில் முன்னணி சீரியல் ஆக தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் கிடைத்த சீரியலாக விளங்குவது பாக்கியலட்சுமி. இந்த நாடகம் குடும்ப பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தத்தை மிக எளிமையாக காட்டுவதால் பெண்களின் விருப்பமான சீரியலாக உள்ளது

பாக்யாவை அசிங்கப்படுத்தும் கோபி
பழனிச்சாமியும் பாக்கியாவும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது கோபி உடனே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொஞ்சி நெருக்கமாக பேசிக் கொண்டே இருக்கிறீர்களா? உன்னோட கேரக்டரை இப்பவே நான் வீட்ல இருக்கேன் பார்த்துக்கிட்டேயும் சொல்ல போறேன் பாரு என பாக்யாவையும் பழனிச்சாமையையும் சேர்த்து வைத்து அசிங்கப்படுத்துவார் ஆனால் எழில் செழியன் இனியா என அனைவரும் பாக்யா பக்கம் நின்று கோபியை எதிர்த்தனர் இவர்களெல்லாம் எதிர்த்தது ஒரு விஷயம் அல்ல ஆனால் ராதிகாவும் பாக்கியா பக்கம் தான் இந்த விஷயத்தில் நின்றார் பாக்யா என்ன செய்தால் உங்களுக்கு என்ன என்ன கோபியை எதிர்த்து பாக்யாவிற்காக பேசினார்.

பாக்கியாவை விட்டு விலகும் பழனிச்சாமி
இந்த பிரச்சனையால் மனம் உடைந்த பாக்யா பழனிச்சாமியை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். அங்கு பழனிச்சாமியிடம் நடந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கும் பொழுது, அவரோ கோபியை பற்றி தெரிந்த விஷயம்தானே விடுங்கள் மேடம் நானும் சில தவறுகள் செய்து விட்டேன் நண்பர்கள் ஆபத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு உதவுவது எனக்கு பழகிவிட்டது,

ஆனால் அதுவே உங்களுக்கு இப்பொழுது பிரச்சனையாக மாறிவிட்டது எனவே இனிமேல் நாம் இருவரும் சற்று விலகி இருப்பதே நல்லது என பழனிச்சாமி கூறுகிறார். அதற்கு பாக்கியா என்ன சார் அடுத்தவங்க என்ன பேசினா என்ன நம்மள பத்தி நமக்கு தெரியும் நாம தப்பா பழகலன்னு நம்ம மனசுக்கு தெரியும் நாம எப்பவும் போல பேசுவோம் என கூற பழனிச்சாமியும் மீண்டும் சமாதானமாகி எபொழுதும் போல் பேச ஆரம்பித்து விட்டனர்.