அழகான சருமத்தை பெற பாதாம் எண்ணெய்யை பயன்படுத்துங்க…!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் தங்களுடைய சருமத்தை பேணிக் காப்பதற்காக பல்வேறு முறைகளை பயன்படுத்தி வருகின்றார்கள். அதிலும் முக்கியமாக மிருதுவான சருமம் மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்காக பல்வேறு கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்தி வருகின்றார்கள் மற்றும் சருமத்திற்கான அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றார்கள். இதற்காக தொகையைப் பற்றி கண்டுகொள்ளாமல் பணத்தை வீணாக்குகிறார்கள்.
இந்தப் பதிவில் இயற்கை முறையில் எப்படி சருமத்தைப் பேணி காப்பது என்பதை பற்றி தான் சொல்ல போகிறேன். நான் இங்கே குறிப்பிடும் எண்ணெய் பெயர் பாதம் எண்ணெய். ஏனென்றால் பாதாமில் வைட்டமின் ஏ மற்றும் சருமத்திற்குத் தேவையான சக்திவாய்ந்த சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. அதனால் பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சருமத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி சருமத்தை தூய்மைப்படுத்தி அழகை மேம்படுத்த உதவுகின்றது.
இயற்கை முறையை பின்பற்றினால் சருமம் நீண்ட நாள் தோற்றப் பொலிவுடன் அழகாக இருக்கும். இயற்கையான முறையில் எப்படி பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துவது பற்றி தெரிந்துகொள்ள மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேன் மற்றும் பாதாம் எண்ணெய்
அரை தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் விட்டு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய்
கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து கலக்கி சருமத்தின் மீது தேய்த்து பின்னர் 10 முதல் 15 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி ரோஸ்வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
பால் மற்றும் பாதாம் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் பால் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து வந்தால், வறண்ட தோல் சரியாகிவிடும். அதுமட்டுமின்றி சருமத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி சருமத்தை தூய்மைப்படுத்தி பேணிக் காக்க உதவுகின்றது.
எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து அதில் பாதாம் எண்ணெயை நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.