ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழியில் பாட வேண்டிய ஐயப்பன் நாமங்கள்

கார்த்திகை மாதம் மிக மிக விசேஷமான மாதம் ஏனெனில் இம்மாதத்தில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பக்தர்கள் நிறைந்து பயபக்தியுடன் ஐயப்ப பாடல்கள் பாடி ஐயப்பனை நினைத்து வழிபடுவர். கார்த்திகை ஒன்றாம் தேதி ஐயப்ப விரதத்தை தொடங்கி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடுவர். 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க முடியாதவர்கள் பத்து நாட்கள் 15 நாட்கள் என இடையில் மாலை போடுவர்.

ஆனால் கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்தவுடன் ஐயப்பனின் நாமங்களை அதிகம் கேட்போம். ஐயப்பனின் அருளை முழுமையாக பெறவும் தினமும் ஐயப்பன் நாமத்தை கூறவும் ஐயப்ப பக்தர்களுக்காக ஐயப்பனின் நாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் பொழுது வழி நெடுகிலும் கூறி செல்லும் பொழுது ஐயப்பனின் துணை உங்களுக்கு என்றும் இருக்கும். மன தைரியமும் புத்துணர்வும் பிறக்கும்.

ஐயப்ப சுவாமியின் நாமங்கள்

சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே…….. அய்யப்போ
அய்யப்போ….. சுவாமியே
சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்
தேவன் சரணம்….. தேவி சரணம்
தேவி சரணம்….. தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்…. பகவதி சரணம்
பகவதி சரணம்… பகவான் சரணம்
சங்கரன் சரணம்…. சங்கரி சரணம்
சங்கரி சரணம்…. சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்…காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்… குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு…… சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…… கட்டும் கட்டு
யாரை காண…. சுவாமியை காண
சுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்… இப்போ கிட்டும்
தேக பலம் தா… பாத பலம் தா
பாத பலம் தா… தேக பலம் தா
ஆத்மா பலம் தா… மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்…. சுவாமிக்கே
சுவாமிக்கே… நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்….. சுவாமிக்கே
சுவாமிக்கே… பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்…… சுவாமிக்கே
சுவாமிக்கே… அவலும் மலரும்
சுவாமி பாதம்… ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்… சுவாமி பாதம்
தேவன் பாதம்… தேவி பாதம்
தேவி பாதம்… தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்….. அய்யப்ப் திந்தக்க தோம் தோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *