கொரோனா தொற்றை தடுப்பதற்கு ஆயுஷ் கபசுரக் குடிநீர் பரிந்துரை
அந்தந்த காலத்தில் விளையும் காய்கறிகள் போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய புதிய உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துளசி இலை, இஞ்சி சாறு மற்றும் மஞ்சள் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி பருகுவது நன்மை அளிக்கும். சிறிதளவு மிளகுத் தூளுடன், தேன் கலந்து உட்கொண்டால் இருமலை கட்டுப்படுத்தும்.
தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் அறிவுரைப்படி யோகாசனம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்கின்றது.
நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட தடுப்பு மருத்துவ முறையான வருமுன் காப்போம் அவசியம் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் covid-19 தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இது உதவுகின்றன.
covid-19 தொற்று பரவும் வகையில் தவறாக பயன்படுத்த வேண்டாமே. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். என்பதோடு ஆரோக்கியமாகவும் இருப்பது தான் தொற்று பரவுவதை தடுப்பதற்கான சிறந்த நடைமுறை ஆகும். இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், போன்ற முன்கள பணியாளர்களுக்கு பணியின் போது கொரோனா தொற்று பரவக் கூடும் என்பதால் அவர்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
மருத்துவர் காமராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்துதல் மையத்திற்குச் சென்று சிகிச்சை பெறும் நோயாளிகள் உடன் கலந்துரையாடினார்கள்.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுய பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவ முறைகளை தடுப்பு நடவடிக்கைகளாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனைகளை கூறியுள்ளனர்.
ஆரோக்கியமான கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் தொற்று பரவுவதை தடுக்கும் என அலுவலர் டாக்டர் தெரிவித்துள்ளார்.