நிறைவைத் தந்த நமது முன்னோர்கள் வாழ்வியல் முறை…!
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ? அப்படியென்று சொல்லுவார்கள் அது நம்ப விஷயத்தில் ரொம்ப ரொம்ப உண்மைங்க ., எதனால் இப்படி சொல்றேன்னு பாக்கறீங்களா ? நம் வாழ்வியல் பழக்கவழக்கங்களே ஒரு சிறந்த ஆரோக்கிய வாழ்விற்கான அறிவியல் என்பது நமக்குத் திரும்பப் புரிய ஆரம்பிக்கிறது… எனவே நம் பண்டைய கால சிறப்பான வாழ்க்கையை இந்த “ காரோனா “ நோய் வந்து நமக்கு மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த வைரஸ் வந்த உடனே அவர்கள் அவங்க கை வைத்தியம் பண்றேன்னு சொல்லி எதை எதையோ செய்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை அப்படியென்று பலபேர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். இந்த வியாதியைக் பூரணமாக குணமாக்கும் மருந்து என்று எதிலுமே( சித்தா ஆகட்டும் இல்ல நேச்சுரோபதி ஹோமியோபதி அலோபதி ) இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்புறம் எதற்கு நாம் நமது பாரம்பரிய மருந்துகளான இஞ்சி-சுக்கு எலுமிச்சம்பழம் நெல்லிக்காய் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி வரலாம் , அது முற்றிலும் நியாயம் !
உடம்பில் வந்து எதிர்ப்புச் சக்தி அதிகமா இருந்தால் அது நோயை எதிர்த்து சண்டை போட்டு வெல்லும்.. எதிர்ப்புச் சக்தி குறையும்போது நோய் வந்து நம் உடல் செல்கள் தோற்கடிக்கப்பட்டு நோய் வந்து உள்ள ஆக்கிரமிக்கும்! இன்றைக்கு இருக்கிற நிலைமையில் கடந்த இரண்டு வாரத்தில் இந்த மாதிரி ஆயுர்வேதிக் வகை என்று சொல்கிறார்களே இந்த நெல்லிக்கனிகள் சிறுதானியங்கள் இவற்றின் வியாபாரம் 30% அதிகரித்து உள்ளது !!
இயற்கை உணவு
நமது ஒப்பற்ற இயற்கை உணவுகளில் உள்ள பலன்கள் இப்போதுதான் மக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது . எதற்காக எலுமிச்சம்பழத்தை வெறும் வயித்துல குடிக்கவேண்டும் ? அது ஒரு சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி தரும் நீர் ஆகாரம் ! இன்றைக்கு இப்படி கொஞ்ச நாளைக்கு மட்டும் நமது பயன்படுத்தினால் பற்றாது. நமது உடலில் வந்து எது கூடுமோ ,எது சூடு அப்படியென்று சொல்லி பெரியவர்கள் நமக்கு நிறையச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
நல் எண்ணெய் வைத்துக் குளிப்பது , நெல்லிச்சாறு பருகுவது , வெந்தையம் , வேப்பிலை , போன்ற பல அருமருந்துகள் நமது உடலை குளிர்ச்சியடைய செய்கின்றது ! அந்த மாதிரி மஞ்சள் , வேப்பிலை இவை இரண்டும் மிகச் சிறந்த கிருமி நாசினிகள் . இவற்றில் நோய் எதிர்ப்புச் சக்தியும் மிக அதிகமாக உள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்தி வந்தால் நமது நோய் எதிர்ப்புச் சக்தி கட்டுமானம் அந்த கூறுகள் நமது உடலிலே சரியாக இருக்கும் சிறு சிறு நோய்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை..!
இப்போது , நமது பாட்டி வீட்டில் இருக்கும்போது வெளியே போய்விட்டு வந்தால் கை கால் அலம்பிட்டு வான்னு சொல்லுவார்கள் நமது வீடுகளில் பாட்டிகள் இருப்பது இல்லை அப்படியே இருந்தாலும் எதுவும் சொல்வதில்லை … இந்த காலத்து வாழ்வில் இப்படி ஆயிடுச்சு . பெரியவர்கள் சொல்லுவார்கள் வெளியே போய்விட்டு வந்தால் கை கால் அலம்பிட்டு வா முகம் கழுவிட்டு வா என்று ..! சாவு வீட்டுக்கு போய்விட்டு வந்தால் கூட குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .. நமது உடலே கிருமிகளின் கூடுகள்தானே அதனால் எங்கே எது பரவியிருக்கு என்று யாருக்குமே தெரியாது .
அடிப்படைத் தூய்மையே அவர்களின் வாழ்வியல் . இன்னும் ஏன் ஆறு மணிக்கு மேல் நகம் வெட்டக்கூடாது என்று சொன்னதில் ஒரு அறிவியல் இருக்கும் , நகம் என்பதே கிட்டத்தட்ட ஒரு நெகிழியை ஒத்த ஒரு பொருள் தானே அதை நம்பக் குழந்தைகள் தெரியாமல் விழுங்கிவிட்டால் அதற்கான விளைவுகள் மிக ஜாஸ்தியா இருக்கும் .
அப்புறம்… அந்த நாட்களில் இன்றைக்கு இருப்பது போன்ற மின்விளக்குகள் கிடையாது , எனவே பொழுது சாய்ந்த பின்னர் வீட்டை கூட்டி மொழுகுவது சாத்தியம் இல்லை. எனவே அப்போது நமது முடியோ , நகமோ உணவில் கலந்து சிக்கல் ஏற்படுத்தி விடக்கூடாது என்றே தான் மாலை வேலைகளில் தலை சீவுவது , நகம் வெட்டுவது என எதையும் செய்வதில்லை!. நமது முன்னோர்கள் சொன்னது எல்லாமே ஒரு வித அறிவியல் அர்த்தத்தோடு தான் இருக்கிறது …
அதையே நாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா புரிந்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம் அதையே நாம் நல்லா தெளிவா புரிஞ்சுகிட்டு செயல்பட்டு வந்தோம் என்றால் மிகச் சிறப்பாக இருக்கும் !
# Stay home # Stay safe
சா.ரா