அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா ஒரு பார்வை
அயோத்தியின் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமாருக்கு முதல் பூஜை செய்யப்பட்டது. 11:40 முதல் தொடங்கியது. அனுமனுக்கு முதல் தரிசனம் செய்தபின் ராமர் வழிபாடு தொடங்கியது. பொதுவாக ராமர் அருள் பெற அனுமனை வழிபட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. இது பழைய கால முறை இன்றும் தொன்றுதொட்டு பின்பற்றப்படுகின்றது.
ராமரின் அதிதீவிர பக்தர் அனுமன் ஆவார். அனுமான் ராமரை அதிதீவிரமாகப் பின்பற்றி வழிபட்டனர். ராமரை பின்பற்றுபவராக ஆஞ்சநேயர் இருந்தார் என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் அனுமார் பெற்று ராமர் கோவில் கட்ட அனைத்தையும் சிறப்பாக நடத்தலாம்.
அனுமார் அருளைப் பெற்ற பின்பே எதையும் தொடங்கினாள் வெற்றி என்பது ஐதீகமாகும். ராமர் கோவில் கட்டுவதற்கு தடைகள் எதுவும் இல்லாமல் இருக்க அனைத்தும் வெற்றிகரமாக முடிய இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முதலில் அனுமனை வழிபட்டு பூஜை செய்து, அதற்குப் பின் ராமர் வழிபாட்டைத் தொடங்கினார். ராமர் பூஜையைக் குழந்தை வடிவில் இருக்கும் ராமரை வழிபட்டு தொடங்கினார். அதன்பின்பு பாரிஜாத மலர் செடி நட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றினார். அதன்பின்பு பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி சென்றார்.
ராமர் கோவில் அயோத்தியில் வெற்றிகரமாகக் கட்டப்பட வேண்டுமென்று பல நாள் வருடக்கணக்காகப் பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அந்த வெற்றிகரமான கோலாகலமான தினத்தை இன்று நடத்திக் காட்டுகின்றனர். ராமர் கோவில் நடுவதற்கு செங்கல் கொண்டு மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின்பு விழாவின் முக்கிய தலைவர்களான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் மோடி. அதன்பின்பு சாவித்ரி கல்லூரிக்குச் சென்று அங்கு உரையாற்றினார்.
3 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்புகின்றார். சுமார் மூன்று மணிநேரம் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூஜையில் நரேந்திரமோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வெற்றிகரமான இந்த விழாவினை நடத்திய நரேந்திர மோடி அவர்கள் சிறப்பான உரையாற்றி டெல்லி திரும்பிவிட்டார். மிக நீண்ட வரலாறு கொண்டது ராம ஜென்மபூமி அங்கு மீண்டும் கோவில் அமையுமா என்ற பல சந்தேகங்கள் கேள்விகள் இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் மோடியின் ராஜதந்திரம் இத இதனைத் நடத்திக் காட்டியது