அயோத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
பாரத தேசத்தின் மிக முக்கிய நாள் இன்று. 5 ஆகஸ்ட் 2020 வரலாற்றில் இடம் பெறப்போகும் நாள். அயோத்தி ராமர் ஆலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று வெற்றிகரமாக மகிழ்ச்சியாக நிறைவேறியது. அடிக்கல்லை நாட்டியது இந்திய தேசத்தின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி.
நிகழ்ச்சிகள்
திங்கட்கிழமை முதல் அடிக்கல் நாட்டு விழாவிற்கு காண விநாயகர் பூஜை துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக பூஜை செய்யும் வேத விற்பன்னர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆன்மீக நிகழ்வுகளும் ஸ்ரீ ராமரின் கடாட்சத்துடன் பரிபூர்ணமாக நடந்தது.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி இந்தியாவின் தலைநகரமான டில்லியில் இருந்து இன்று காலை 9:30 மணியளவில் புறப்பட்டு விமானம் மூலமாக லக்னம் வந்தடைய ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தியை அடைந்தார். உ.பி. கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் இணைந்து பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் மோடி அங்கிருந்து நேராக ஸ்ரீராமரின் பரம பக்தரான அனுமாரின் பழமையான கோவிலை தரிசனம் செய்து பின்பு பால ராமரை தரிசித்து அடிக்கல் நாட்டும் இடத்திற்கு சென்றார். அடிக்கல் நாட்டும் மேடையில் பூஜை செய்து வைக்கும் வேத விற்பன்னர்கள், உ.பி. கவர்னர், முதல்வர், பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் என சிறு மக்கள் கூட்டத்துடன் இந்த விழா நடைபெற அதனை தொலைவிலிருந்து பார்த்து ஸ்ரீராமரின் பரமானுகிரகம் பெற முக்கியஸ்தர்கள் முகக்கவசம் அணிந்து இடைவேளை விட்டு தரிசித்தனர்.
அயோதி நகரமே விழாக்கோலம் பூண்டு வண்ணமயமாக மலர் அலங்காரத்துடன் காட்சியளித்தது. பல இடங்களிலிருந்து கல் மணல் என கோவில் எழுப்ப தேவையான பொருட்கள் நன்கொடையாக வந்து கொண்டிருக்க. ராம நாமம் எழுதிய கல்கள் அடிக்கல் விழாவிற்காக பயன்படுத்தப்பட்டது. ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி வெள்ளியாலான செங்கலை அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வை வரலாற்றாகும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அதனை ஒட்டி சிறிய உரை ஆற்றினார் பிரதமர் மோடி.
பிரதமரின் உரை
ஜெய் ஸ்ரீ ராம்! ராமர் பிறந்த இடமான அயோத்தியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ராம நாமம் முழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஸ்ரீ ராமர் கோவிலில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த எங்கள் ராம் லல்லாவுக்கு இப்போது ஒரு பெரிய கோயில் கட்டப்படும். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ராம் ஜன்மபூமி உடைந்து மீண்டும் கட்டப்படும் சூழலில் இருந்து இன்று விடுபடுகிறார்.
ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவது வரலாறாக அமைவதோடு வரலாறு மீண்டும் நடக்கிறது எனவே கூறலாம். பழங்குடியினர் முதல் படகு வீரர்கள் வரை ஸ்ரீ ராமருக்கு உதவியது மற்றும் குழந்தைகள் கிருஷ்ணர் கோவர்தன் மலையை உயர்த்த உதவியது என இந்த நிகழ்வுகளை போல் அனைவரின் முயற்சியும் கோயில் கட்டுமானம் நிறைவடையும்.
ஸ்ரீ ராமின் ஆட்சியின் முக்கிய கொள்கையாக சமூக நல்லிணக்கம் இருந்தது. ஸ்ரீ ராம் கோயில் கட்டுமானம் நாட்டை ஒன்றிணைக்கும் கருவியாகும்.
ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக இருக்கிறார் ஸ்ரீ ராமர். ஸ்ரீ ராமரின் கோவில் அன்பு நம்பிக்கை மட்டும் அர்ப்பணிப்பை போதிக்கிறது. ஸ்ரீ ராமர் கோவில் நமது கலாச்சாரத்தில் நவீன சின்னமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ ராமர் கோவிலுக்காக போராடியவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.