திரிஷா இருக்(கு)காங்க ஆனா இல்ல
ஒப்பனையால் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட நபர். யார் அந்த நபர் தெரியுமா! திரையுலகத்தின் சிறந்த நடிகை திரிஷா கிருஷ்ணன்.
பேரழகை ரசிக்கும் பேரழகி
ஒப்பனை கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கம் என்பவர் சமூக வலைத்தளங்களில் தன் ஒப்பனை கலையை செய்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
பல புதுவிதமான பார்வையில் பலவிதமான ஒப்பனைகள் செய்து புரட்சிகரமான சுவாரசியமான புகைப்படங்களை இவரின் சமூக வலைதளப் பக்கங்களில் காணலாம்.
குறும்படத்திற்கு கதைக்கரு இருப்பதுபோல் இவர் ஒப்பனை செய்யப்பட்டு எடுக்கப்படும் புகைப்படங்கள் கதை கூறுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஹேமாநிக்கா என்னும் நாட்டியப் பேரொளியாக நடித்ததை நாம் அனைவரும் அறிவோம்.
ஹேமாநிக்கா கதாபாத்திரத்தை சித்தரிக்கும் விதமாக கண்ணன் ராஜமாணிக்கம் ஒப்பனை செய்துள்ளார்.
த்ரிஷாவின் முக ஒற்றுமைப்பாட்டுடன் இருக்கும் நபரை ஆடிஷன் செய்து தேர்ந்தெடுத்து ஒப்பனைகள் செய்யப்பட்டு திரிஷாவை போல் சித்தரிக்கப்பட்டுள்ளார் சிந்துஜா என்னும் பெண்மணி.
கண்கள் மற்றும் உடல் பாவனை த்ரிஷாவை போல் இருந்தாலும் மெல்லிய முக வாட்டமும் கூர்மையான மூக்கும் ஒப்பனையால் இதற்குமேல் மாற்ற முடியவில்லை என ஒப்பனைக் கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சிந்துஜா தன்னைப்போல் ஒப்பனையில் சித்தரிக்கப்பட்டிருப்பதை கண்ட த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டும் விதமாக பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ஒப்பனைக் கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கத்தின் மகிழ்ச்சிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. இவரின் வேலையை கண்டறிந்து பாராட்டியமைக்கு நன்றி தெரிவித்து திரிஷாவை பெரிய உள்ளம் படைத்தவராக போற்றியுள்ளார்.
சிந்துஜாவை திரிஷாவாக மாற்றி புகைப்படங்களின் வாயிலாக காட்டிய ஒப்பனை கலைஞர் வெளியிட்ட காணொளி இதோ.
கூடிய விரைவில் மற்றொரு நடிகையுடன் சந்திப்பதாகவும் இவர் கூறியுள்ளார். செம தூளான புகைப்படம் மக்களை மீண்டும் சந்திக்கிறேன்.