சினிமா

அட்டகாசமான மணமக்கள்!ராணா-மிஹீகா

ராணா தகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் திருமணம் விழாவாக சனிக்கிழமையன்று கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு வந்த பல பிரபலங்களின் புகைப்படங்களை பார்த்து ரசித்தவாறே இருக்க மணமக்களின் புகைப்படங்கள் இதோ.

மணமகளின் ஆடையைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா! தங்க நிற ஆடையில் ஜொலித்த மிஹீகா பஜாஜ் அதற்குத் தகுந்தாற்போல் அதிரடியாய் அணிகலன்களை அணிந்து இருந்தார். இவரின் ஆடையை சித்தரித்தவர் அனாமிகா கன்னா.

சனிக்கிழமை அன்று நடந்த திருமணத்தை முன்னிட்டு ஹல்தி மெஹந்தி பெல்லிக்கொடுக்கு விழா கணேஷ் பூஜா மற்றும் மாதா கி சவுக்கி எனப் பல சடங்குகள் கலாச்சாரத்தை பின்பற்றி இரு குடும்பத்தாரும் இணைந்து நடத்தினர்.

இவர்களின் திருமண பேச்சு முடிவு செய்ததின் அடுத்த கட்டமாக நிச்சயதார்த்தத்தை போன்ற ரோக்கா சடங்கு மே மாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லக்ன பத்திரிக்கை சடங்கு ஜூன் மாதத்தில் நடக்க மணமக்கள் சற்று நெருக்கமாக தொடங்க இணையதளங்களில் அவர்களின் புகைப்படம் வைரலாக தென்பட்டது. மணமகனின் வீட்டார் மணமகளின் வீட்டுக்கு சென்று திருமண பத்திரிக்கையை கொடுப்பது இந்த சடங்கு.

தெலுங்கு திரை உலகின் பிரபலமான நடிகர் ராணா தகுபதி பாகுபலி என்ற படம் மூலமாக மற்ற திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பாகுபலியின் அண்ணாவான பல்லால் தேவ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பெரிய வரவேற்பைப் பெற்றார். ஆஜானுபாகுவான உடல் கட்டு இருக்கும் ராணா பல ரசிகர்களை பெற்றார்.

மணமகன் ராணா தகுபதி நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் சின்னத்திரை பிரபலம் காட்சி விளைவுகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒரு தொழில்முனைவராக திகழ்கிறார். மணமகள் மிஹீகா பஜாஜ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர். மேலும் ஒரு பிரபலமான ஆன்லைன் உள்துறை மற்றும் கட்டிடக் கலை இதழில் எழுத்தாளர் ஆவார்.

திரை நட்சத்திரமாக இருக்கும் ராணா நிறுவனத்தின் நிருபராகவும் எழுத்தாளராகவும் திகழும் மிஹீகா திருமணம் இரு மரபில் இணைந்து இரு வீட்டார் உறவினர்கள் மாற்றும் நெருங்கிய நண்பர்கள் என குட்டி கூட்டத்துடன் இனிதே நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *