சிங்கப்பெண்ணே பாண்டியம்மாவின் பரபரப்பான பாராட்டத்தக்க போட்டோ ஷூட்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகைச்சுவை நாயகனாக கலக்கி வரும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர். தன் தந்தையைப் போலவே நகைச்சுவையும் கொண்டுள்ள நடிகையாக வளர்ந்து வருகிறார் இந்திரஜா சங்கர்.
பிகில்
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜயின் நடித்த பிகில் படம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்தப் படத்தின் முக்கிய அங்கமான பெண் கால்பந்து கூட்டத்தில் ஒவ்வொருவரின் முகமும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களின் மனதில் நின்றது.
பிகில் பாண்டியம்மா
இளைய தளபதி விஜய் பாண்டி அம்மாவை குண்டம்மா என்று கேலி செய்யும் காட்சி அதற்குப்பின் பாண்டியம்மாவின் எழுச்சி மிகுந்த கால்பந்தாட்டம் என களைகட்டியது பிகில் படத்தில் இந்திரஜா சங்கரின் நடிப்பு.
ஊரடங்கு
இன்று சிவசங்கர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு விதமான புகைப்படங்களும் காணொளிகளும் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை பெற்று வருகிறார். சமீபத்தில் அழகிய போட்டோஷூடுடன் மக்களை ரசிக்க வைத்தார்.
பெண்மை
1 அக்டோபர் 2020 மாலை 7 மணி அளவில் பிரமாதமான கருத்துள்ள போட்டோ ஷூட்டை வெளியிட்டுள்ளார் இந்திரஜா சங்கர். புகைப்படங்களோடு அவரின் தமிழ் வரிகள் பாராட்டத்தக்கது.
போற்றத்தக்க பெண்மையின் அவல நிலமையை சித்தரித்த ஒப்பனைக் கலைஞர் பூர்ணிமா, கருத்தை கண்ணியமாக கொடுத்த இந்திரஜா ஷங்கர், இதனை புகைப்படம் பிடித்த ஹரிஷ் டோபே என அனைவருக்கும் பலத்த கைத்தட்டல் கூடிய பாராட்டுக்கள்.
மேலும் படிக்க : மின்சாரக் கனவு படம் பாடல் வெண்ணிலவே வெண்ணிலவே…