பயமுறுத்தும் கொரோனாவை பற்றிய கவலையை விடுங்க
பயமுறுத்தும் கொரோனாவை பற்றிய கவலையை விடுங்க. நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கையின் படி கொரோனா வைரஸ் ஆனது. பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு, தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் பரவும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிக மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் இது வேகமாகவும், எளிதாகவும் பரவும் தன்மை உடையது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளை கொடுங்கள். கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும்.
வீட்டிலிருந்தே விளையாடுதல், உடற்பயிற்சி போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள். இது போன்ற காரணிகளால் நாம் கொரானா போன்ற நோயில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை, பள்ளி என வீட்டை விட்டு வெளியில் சென்று வந்த உடன் அணிந்திருக்கும் உடையை மாற்றி விடுவது நல்லது.
அந்த வீட்டின் உள்ளே நுழையலாம் குழந்தைகள் வெளியே சென்று வீட்டிற்குள் வந்தவுடன் எந்த அளவு விரைவில் உடைகளை மாற்றி கொள்கிறார்களோ அந்த அளவுக்கு நல்லது.
பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் காலணிகளை வீட்டின் வெளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலமாக கொரோனா வைரஸ் எளிதில் நம்மை தாக்கும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெருமளவில் இதனால் முன்கூட்டியே தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பைத் தரும். வெளியே செல்லும் போது முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுகாதாரத்தையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.