டாக்டர் செலவை குறைக்கும் ஆவாரம்பூ டீ..
தேவையான பொருட்கள் :-
உலர்ந்த ஆவாரம் பூ 250 கிராம்,
கொத்தமல்லி 500 கிராம்,
சுக்கு 150 கிராம்,
ஏலக்காய் 30 கிராம்,
சிற்றரத்தை 10 கிராம்,
பேறாரத்தை 10 கிராம்,
மிளகு 10 கிராம்,
செய்முறை:-
இதில் கொத்தமல்லியை மட்டும் லேசாக வறுத்துக் கொண்டு மற்ற அனைத்து பொருட்களையும் வறுக்காமல் மேற்கண்ட அளவுகளின்படி சேகரித்துக் கொள்ளவும்
பின் சேகரித்த அனைத்தையும் சூரணமாக செய்து கொண்டு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த சூரணத்தில் ஐந்து கிராம் அளவு எடுத்து தண்ணீரில் இட்டு காய்ச்சி சுவைக்காக கருப்பட்டி என்கின்ற பனை வெல்லம் சிறிது சேர்த்து பருகி வந்தால் உடலில் நல்லதொரு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
சர்க்கரை நோயாளிகள் ஆவாரம்பூ தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதனால் சக்கரையின் அளவும் சற்று குறைந்துவிடும்
ஆவாரை பூத்திருக்க சாவாரும் உண்டோ என்ற பழமொழியின் மூலம் ஆவாரையின் பெருமையைத் தெரிந்து கொண்டு இந்த ஆவாரம் பூ தேநீரை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.