ஆன்மிகம்ஆலோசனை

அபரிதமான வாழ்க்கைக்கு ஆஷாட நவராத்திரி வழிபாடு

வேண்டியதை கொடுக்கும் தாயவள் நமது எதிரிகள் அழிக்கும் ஆற்றல் கொண்டவள் பில்லி சூனியம் போன்றவற்றை போக்குபவள். விவசாய செழிக்க உதவுபவள். பன்றி முகமுடையவள் திருமலை கோவிலில் வாராஹியை வழிப்பட்டபின்புதான் திருமலையானை வழிபடச் செல்வார்கள். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தருபவள்.

அஷாட நவராத்திரி :

வருடத்தில் 5 வகையான நவராத்திரிகள் உள்ளன ஆனால் நமக்கு தெரிந்த நவராத்திரிகள் தான் தெரியும் ஆனால் ஆனி-ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியானது அஷாட நவராத்திரியில் வராஹித் தாயை வணங்கி வருகின்றனர்.

ஆஷாட நவராத்திரியில் வராஹி

வராஹி விவசாய நிலங்களுக்கு நல்ல வளம் தருபவள். வராஹி சபத கண்ணியருள் ஒருவள் போரில் வெற்றிகளை பெற உதவுபவள். அறுவடை காலங்களில் விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தருபவள். ஆதாலால் நவராத்திரியில் ஆனி- ஆடி மாதங்களில் அவளுக்கு என வணங்கி வருகின்றோம்.

மேலும் படிக்க: அஷாட நவராத்திரி பூஜைமுறை..!!

குப்த நவராத்திரிதான் ஆஷாட நவராத்திரி

குப்த நவராத்திரி என வட மாநிலங்களில் வராஹி வழிபாடு வழக்கில் உண்டு. தென் மாநிலங்களில் சமிப காலங்களில் அதிக பிரசித்தம் அடைந்து வருகின்றது. வட மாநிலங்களில் குப்த நவராத்திரி என ரகசியமாய் செய்து வருவார்களாம். ஜூலை 10, 11 நாடளில் சூரிய மற்றும் சந்திர மானத்திற்கேற்ப மக்கள் வழிபடலாம். ஜூலை 14 ஆம் தேதி பஞ்சமி திதி வருகின்றது. ஜூலை 18 ஆம் நாள் அஷ்டமி நவமி தசமி 3 திதிகள் வருகின்றன.

வழிபாட்டு முறைகள்:

நவராத்திரியில் தாயின் படம் அல்லது சிலையை வீட்டில் வைத்து மக்கள் அதற்குரிய முறையில் அவரவர் வழக்கப்படி வழிபாடு நடத்துவார்கள். படம் இல்லை எனில் தாயை மனதில் நினைத்து பூஜை அறையில் நெய் விளக்கேற்றி அவளுக்கு படைக்க நிலத்திற்கடியில் விளைந்த கிழங்கு வகைகள் சக்கரவள்ளி கிழங்கு, பொங்கல், மிளகு சாதம், பொட்டுக் கடலை கரும்புச்சக்கரை ஆகியவை கொடுக்கலாம். நவராத்திரி பொதுவாக ஆமாவாசை முடிந்து அடுத்து வரும் நாட்களில் துவங்குகின்றனர்.

விவசாயம் செழிக்க வராஹி வழிபாடு:

விவசாயம் செழிக்க வேண்டுமென்றால் வாராஹித்தாயின் அருள் கிடைக்கும். கையில் கலப்பை கொண்டு இருப்பாள், விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்தி விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். தானிய பிரியை எனவும் வராஹி அழைக்கப்படுகின்றாள். ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் காலத்தில் தஞ்சையில் அம்பாளிடம் வைத்து வராஹி அருள் கிடைக்கப் பெறுவார்கள்

பகை போக்கச் செய்வாள் பஞ்சமிக்குரியவள்:

தேவையற்ற பழி பாவங்களுக்கு ஏற்படும் பொழுது வராஹியை வழிபட்டால் அதற்கு தக்க உபயம் கொண்டு வழிபடலாம். வராஹி வழிபடக்கூடியவர்கள் பஞ்சமித் திதியில் தேவிக்கு உபவாசமிருந்து வழிபடலாம். நவராத்திரியில் பஞ்சமி நாளும் வருகின்றது அன்றைய நாளில் அவளுக்கு விரதமிருந்து வணங்கலாம்.

மேலும் படிக்க: ஆஷாட நவராத்திரி வழிபாடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *