சினிமா

டெடி நாயகி பிறந்தநாளை கொண்டாடிய நாயகன்

சாயிஷா சைகல் தன்னுடைய 23 வது பிறந்த நாளை நேத்து குடும்பத்தோட கொண்டாடினாங்க. 12 ஆகஸ்ட் 1997 மும்பையில பிறந்து இருக்காங்க சாயிஷா.

பாலிவுட் திரையுலகில நடிச்சிட்டு வரும் சுமித் சைகல் மகனான சாயிஷா தன்னுடைய பதினெட்டு வயசுலேருந்தே நடிச்சுட்டு வராங்க. 2015-ல தெலுங்கு திரை உலகத்துலையும் 2016-ல ஹிந்தி திரை உலகத்துலையும் அதத் தொடர்ந்து 2017-ல தமிழ் திரை உலகத்துலையும் களமிறங்கினவங்களுக்கு தொடர்ந்து தமிழ் படம் வந்துட்டே இருக்குங்க.

2017 வனமகன் திரைப்படத்தில ஜெயம் ரவியோட நடிச்சவங்களுக்கு அடுத்த வருஷத்திலேருந்து இப்ப வரைக்கும் பிஸியா இருக்காங்க. 2018 ல கார்த்தியோட கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, ஆர்யாவோட கஜினிகாந்த்.

அதுக்கு அடுத்த வருஷம் 2019லையும் தன்னோட கணவரோடு இணைந்து நடிச்சாங்க ஆனா அந்தப் படத்தோட கதாநாயகர் சூரியாங்க. என்ன படம்னு யோசிக்கிறீங்களா வெட்டுக்கிளி ஸ்பெஷல் காப்பான் தாங்க.

2019 பிப்ரவரி மாசம் ஆர்யா சாயிஷா நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் மார்ச்லையே திருமணம் பண்ணிக்கிட்டாங்க. கணவனும் மனைவியும் இணைந்து ஹாட்ரிக் படமா வெளியாகப்போற படம் டெடி. அதத் தொடர்ந்து கன்னடத் திரையுலகிலையும் களமிறங்க போறாங்க. புனித் ராஜ்குமார் மற்றும் சாயிஷா நடிப்பில யுவரத்னா படப்பிடிப்பு கட்டத்துல இருக்குங்க.

டெடி படம் படப்பிடிப்பு முடிஞ்சு தயாரிப்பு போயிட்டு இருக்கு. 2020 ஜூன் மாசம் வெளியாக வேண்டிய படம் மற்ற படங்களப் போல கோரோனாவால ஓடிடி ரிலீஸ் பண்ணலாமானு பேச்சு காத்துவாக்குல வந்து போயிட்டு இருக்குங்க.

கணவன் மனைவியோட பக்ரீத் கொண்டாட்ட புகைப்படங்களும் செமையா இருந்துதுங்க. திரையுலக வேலை பிஸியா போயிட்டு இருந்தாலும் சுய வாழ்க்கையில ரெண்டு பேரும் தனித்தனியா தனித்துவமா அவங்களோட வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்க வளமான வாழ்க்கைய வாழ ஆரோக்கியமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்காங்க.

ஆர்யா உடற்பயிற்சி கூடம் திறந்த முதல் நாளிலேருந்தே உடற்பயிற்சி செஞ்சு ஜிம்லேருந்து புகைப்படங்கள சமூக வலைத்தளங்கள்ல போடுவதும் அதுக்கு முன்னாடி சைக்கிளிங் பண்ற வீடியோக்களும் பரவி வந்தது. மனைவி எந்த விதத்திலும் சளைத்தவங்க இல்லைனு சொல்றா மாதிரி சூப்பரா பல பாடல்களுக்கு நடனமாடி வீடியோவ வெளியிட்டுடே இருக்காங்க சாயிஷா.

இப்படி கணவன் மனைவி தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் டெடி படத்தில பிஸியாக இருந்தாலும் சூப்பரான பர்த்டே கேக்கோட சாயிஷா பர்த்டேவ கொண்டாடி இருக்காரு ஆர்யா. குடும்பத்தோட அழகான புகைப்படங்களோட நன்றிகளைத் தெரிவிச்சிருக்காங்க சாயிஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *