ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவு
மார்கழி மாதம் ஆருத்ரா விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகி தெரிவித்துள்ளனர்.
- ஆருத்ரா விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
- 30 ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளன.
- வலைத்தளங்களில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம்
மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி வெளியூர் பக்தர்களை நகரத்தின் வெளியே தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 30 ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளன.
200 நபர்கள் மட்டுமே ஆருத்ரா தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆயிரம் நபர்களும் தேரோட்டத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தங்கும் விடுதிகளில் வெளியூர் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.
உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தெரிவித்துள்ளன.