வாழ்க்கை முறைவாழ்வியல்

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்

நம் உடலில் இரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செயல்படுகின்றது. அதற்கு ஏற்றார் போல் தான் நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான் அமையும்.

இப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவது தான் நாடி. இதயத் துடிப்பும், நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும். சித்திரை, வைகாசி – மாதங்களில் சூரிய உதயம் நேரத்திலும்,

ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -மாதங்களில் மதிய வேலைகளிலும்,

மார்கழி, தை, மாசி – மாதங்களில் மாலை நேரங்களிலும்,

ஆவணி, புரட்டாசி, பங்குனி – மாதங்களில் இரவு நேரத்திலும், இந்த நாடியைப் பார்க்கும் மாதங்களாக நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர்.

பத்துவகை நாடிகள்:

1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.

  1. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
  2. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
  3. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
  4. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
  5. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
  6. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
  7. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
  8. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
  9. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடிகளின் தன்மை:

வாத நாடி

வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றி ல் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச் சிக்கலும், சிறுநீர் க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.

அறிகுறிகள்: உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவில் கொஞ்சமா கவும் வெளியாகும்.

பித்த நாடி

பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற் பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய் க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு, காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல், நெஞ்செரி ச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளி வில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்ச ள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

அறிகுறிகள் : உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறு நீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பா கவும் வெளியாகும்.

சிலேத்தும நாடி:

சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற் றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.

உடல் அறிகுறிகள்:

உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:

தலையில் 15000
கண்களில் 4000
செவியில் 3300
மூக்கில் 3380
பிடரியில் 6000
கண்டத்தில் 5000
கைகளில் 3000
முண்டத்தில் 2170
இடையின் கீழ் 8000
விரல்களில் 3000
லிங்கத்தில் 7000
மூலத்தில் 5000
சந்துகளில் 2000
பாதத்தில் 5150
………..
மொத்தம் 72000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *