உலகில் 3.33 கோடி பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பெருகி வருகின்றது. அரசு ஆறு மாதங்களுக்கு மேலாக நாட்டைப் பொதுமுடக்கத்தில் வைத்திருந்தது. தற்போது வேறு வழி இன்றி ஊரடங்கு தளர்வை அறிவித்து மக்களை வெளியே வர அனுமதி தருகின்றது.
ஊரடங்கு தளர்வு பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது உறுதியாக இருக்கின்றது இந்த நிலையில் 200 நாடுகளில் மனிதர்களுக்கு பெரிய அளவிலான கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா உறுதியாகி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
அமெரிக்கா போன்ற உலக நாடுகள்
அமெரிக்காவில் மட்டும் 73 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தற்போது 60 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையில் இருக்கின்றனர். பிரேசில் நாட்டில் 47 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
கொரோனா அலை
உலக அளவில் மூன்று புள்ளி 3.33 கோடி மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்றுவருகின்றனர். அதில் இறந்தவர்களும் உண்டு. கொரோனா தொற்றுப் பெருகிவரும் காரணத்தில் இரண்டாவது அலையும் அடிக்கும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
மிரட்டும் கொரோனா புள்ளி விவரங்கள்
மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது மட்டும் அவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் புள்ளிவிவரங்கள் நம்மை மிரட்டுகின்றன. பாதுகாப்பு என்பது மட்டும் தான் தற்போது அவசியமாக இருக்கின்றது. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் உடல் ஆரோக்கியம், வீட்டில் சமைத்து சாப்பிடுதல், காய்கறிகளை சுத்தப்படுத்தி சமைத்து உண்டு வருதல் ஆகியவை முக்கியமாகக் கருதப்படுகின்றது.
பொதுசுகாதாரம் பாதுகாப்பு
உலகெங்கும் பெருகிவரும் கொரோனா மக்களை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது இன்னும் அதன் போக்கு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. இதற்கான எதிர்ப்பு மருந்தும் நமக்கு கிடைக்க வில்லை என்பதுதான் தற்போதைய நிலவரம் இந்தநிலையில் நோய்த்தொற்று தடுக்க பொது சுகாதாரம் என்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது.