மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் ராணுவம்..!
ஜம்மு, காஷ்மீரில் உள்ள கிராமங்களில் மாணவர்களுக்கு குளிர்கால வகுப்புகளை நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், பாதுகாப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு, காஷ்மீர் மூழுவதும் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டதால், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களை பார்க்கவுள்ளதால் சந்தோஷமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளானர்.
இதனைதொடர்ந்து அங்கு குளிர்காலம் தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. இதனால் மாணவர்கள் இரட்டை மகிழ்சியில் உள்ளனர்.