அர்ஜீன் டாங்கியில் லேசர் கருவிசோதனை வெற்றி!
ஆயத்தமாகும் இந்தியா அடக்கி வாசித்தது போதும் என்று நினைக்கின்றது என்பது தெரிகின்றது. அர்ஜுன் வழிகாட்டும் ஏவுகணையைப் பொருத்தி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ பரிசோதித்து இருக்கின்றது. பரிசோதனையின் முடிவு இந்தியாவிற்கு சாதகமாக அமைந்திருக்கின்றது.
டிஆர்டிஓ நாட்டின் பாதுகாப்பு கருவிகளுக்கு உயிர்ப்புத் தரும் ஒரு அமைப்பு ஆகும். இது அர்ஜுன் டாங்கியில் லேசர் வழிகாட்டும் ஏவுகணையைப் பொருத்தி சோதித்துப் பார்த்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இந்தச் சோதனையானது எதிரிகளின் டாங்கிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. அர்ஜுன் டாங்கியில் லேசர் ஏவுகணையை வழிநடத்திச் செல்லும் இது இந்தியாவிற்கு சாதகமாக வெற்றிகரமாக அமைந்திருக்கின்றது.
இந்தியாவில் அகமத் நகரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையானது மூணு கிலோ மீட்டர் வேகத்தில் இலக்கை வெற்றிகரமாகக் கணித்து தாக்க உதவும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவிக்கின்றது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் புனேவில் ஆயுத ஆராய்ச்சியை மேற்கொண்டது அங்கு உருவாக்கப்பட்டது.
டிஆர்டிஓ ஏவுகணை ஆற்றலுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அர்ஜுன் டாங்கியில் பொருத்தப்பட்ட லேசர் இலக்கை அடைய உதவி செய்வதாக இருக்கும் இந்தியாவிற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று பல தரப்பிலிருந்து டிஆர்டிஓ பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நாமும் பாராட்டுவோம் நமது தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.
நாட்டில் 80 கோடி இளைஞர்கள் இருக்கின்றனர் எத்தனையோ படிக்கின்றோம் எவ்வளவோ இலக்குகள் வைத்திருக்கின்றோம் இந்திய பாதுகாப்புத்துறை அது சார்ந்த ஆராய்ச்சி துறையில் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் இந்தியாவிற்கு உதவிகரமாக இருக்கும் இதனைப் படிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகம் பிறக்க வேண்டும்.
எல்லையில் சென்று போர் புரிய முடியவில்லை என்றாலும் எல்லையில் போர் புரியும் அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று நினைக்கும் இளைஞர்கள் நீங்கள் எனில் பாதுகாப்பு துறைக்கு இது போன்ற பொது ஆராய்ச்சி படைப்புகளை உருவாக்க அறிவியல் சார்ந்த படிப்புகள் படிக்கலாம் நீங்களும் உயரலாம் தேசமும் உயரும்.