கரூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!
கரூர் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் சத்துணவு துறையில் இருக்கின்ற காலியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உடையவர் விண்ணப்பிக்கலாம். கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சத்துணவு துறையின் கீழ் விருப்பமுடையவர் விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியிடங்கள் நிரப்ப மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை அமைப்பாளர் பணியிடங்கள் 158 மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்கள் 264 ஆகும். மேலும் இப்பணியிடங்களுக்குத் தகுதியுடையோர் மொத்தம் 472 பணியிடங்கள் கரூர் மாவட்டத்தில் நிரப்பப்படுகின்றன.
சத்துணவு திட்ட அமைப்பு துறையில் பணி வாய்ப்பு பெற கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கரூரில் வேலைவாய்ப்பு பெறுவோர் ரூபாய் 3000 முதல் 24, 200 வரை சம்பளம் பெறலாம். கரூர் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயது உடையோர் தகுதியுடையவர்கள்.
கரூர் மாவட்டத்தில் பணியிடங்களில் இருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு பெற, நேரடி தேர்வு மூலமாகத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சத்துணவு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பக் கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
கரூர் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு பெற செப்டம்பர் 24 முதல் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி செப்டம்பர் 30, 2020 அதிகாரப்பூர்வ லிங்கின் இணைப்பினை கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து முழுவதுமாகப் படித்து பார்த்து விண்ணப்பங்களை விண்ணப்பிக்கத் தேவைப்படும் சான்றிதழ்களின் இணைப்பைக் கொடுத்துள்ளோம்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற வயதுவரம்பு ஆகஸ்ட் 31, 2010 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
மேலும் கரூர் மாவட்ட சத்துணவு பணியாளர்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பதாரர் தான் தங்கியிருக்கும் பகுதிக்குள் படத்திற்கும் இடையே மூன்று கிலோமீட்டர் தொலைவில் தங்கியிருக்க வேண்டும். மேலும் காலியிடம் உள்ள பள்ளிகளுக்கான விவரங்கள் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கின்றது. விண்ணப்ப நகல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும் வேலை வாய்ப்பு பெறவும்